இன்றும் இறைவாக்கு கேட்போமா?
இன்றும் கேட்போம் நற்செய்தி!
இன்றைய நற்செய்தி
நல்வாழ்த்து:
இறைவனின் பிள்ளையே வாழ்த்துகிறேன்;
இயேசுவின் பெயரில் வாழ்த்துகிறேன்;
கறைகள் போக்கும் திருவாக்கால்
கழுவப்படவே வாழ்த்துகிறேன்!
நல்வாக்கு:
மத்தேயு 25: 26-28.
“அதற்கு அவருடைய தலைவர், ‘ சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் ‘ என்று கூறினார். ‘ எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.”
நல்வாழ்வு:
கொடுக்கும் இறையே கூடக் கொடுப்பார்;
கொடியவர் கெடுக்க விடாது தடுப்பார்.
எடுக்கும் நாமும் ஏய்ப்பதை விடுவோம்;
இயேசு தருவதில் இன்பம் அடைவோம்!
ஆமென்.
இறைவாக்கு
நல்வாழ்வு:
தூது
நல்வாக்கு:
வாக்கும் வழியும்
நற்செய்தி
நல்வாழ்வு:
வானின் செய்தி
நல்வாக்கு:
”விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.”
எனது சாதி!
எந்த சாதி என்பவரே,
எனது சாதி சொல்லவா?
அந்த சாதி யாவருக்கும்
சொந்த சாதி அல்லவா?
நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நிலைகளில் சாதி மாறுகிறவன். எப்படித் தெரியுமா?
காலையில் எழுந்தவுடன் இறைவேண்டல் ஏறெடுத்து, திருமறை வாசிக்கிறேன். அப்போது மட்டும் அந்தணன்.
அதன் பின்னர், என் வீட்டாரோடும், மற்றவர்களோடும் சண்டைபோடுகிறேன்; அப்போது நான் சத்திரியன்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னுடையவர்களை விற்கப் பார்க்கிறேன்; அவர்களை வைத்துப் பொருள் சேர்க்கப் பார்க்கிறேன். அப்போதெல்லாம் நான் வைசியன்.
உடல் உழைக்கும் போதெல்லாம், நான் சூத்திரன்.
உடல் அழுக்கைக் களையும்போதோ, நான் பஞ்சமன்.
இப்படி நான் மட்டுமல்ல, சாதி வேறுபாடு பார்க்கிற எல்லா மனிதர்களும் எல்லா இடங்களிலும் சாதி மாறுகிறார்கள்!
எனவேதான் சொல்கிறோம்:
ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்!
நன்றே கேட்போம்; யாவரையும் இணைப்போம்!