வெங்காயம்!
வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன?
எங்காய உடல் வளர்க்க,
எங்கெங்கோ பாடியவர்,
பொங்காத உணவினுக்கு,
வெங்காயம் இல்லையென்று,
சங்காக மனை முழங்க,
தங்கம்போல் தேடுகிறார்!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
வெங்காயம்!
வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன?
எங்காய உடல் வளர்க்க,
எங்கெங்கோ பாடியவர்,
பொங்காத உணவினுக்கு,
வெங்காயம் இல்லையென்று,
சங்காக மனை முழங்க,
தங்கம்போல் தேடுகிறார்!
-கெர்சோம் செல்லையா.
உண்மையில்லாதோர் சேரும் இடம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:45-46.
| 45அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால், |
| 46அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான். கிறித்துவில் வாழ்வு: உண்மையில்லாதோர் சேரும் இடத்தில், ஒரு பெரும் பங்கு சேர்ப்போர்தான், அண்மையில் நமது தலைவர்களாயினர்; அதுதான் இன்றைய வரலாறு. கண்ணினில் நீரும், நெஞ்சினில் வலியும், கடந்த நாட்களில் தந்தவர்தான், வெண்மையாய் மாறி, மனந்திருந்திடுவார்; விடுதலை வாக்கை நீ கூறு! ஆமென். |
உண்மையும் மதியும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா: 12:41-44.
| 41அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான். |
| 42அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்? |
| 43எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். |
| 44தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். கிறித்துவில் வாழ்வு: உண்மையும் மதியும் உயர்வின் வழியாம்; உயர விரும்பின் இவையிரு விழியாம். விண்ணினின் அரசன் உரைக்கும் மொழியாம்; விரும்பாதிருப்பின் விளையுமே பழியாம். மண்ணினில் மாந்தர்க்கு வேறே வழியாம். மாயையைக் காணா மயங்கிய விழியாம். எண்ணுவீர் உயர இறைவனின் மொழியாம்; ஏறும் வழியில் இல்லை பழியாம்! ஆமென். |
அறியாத அவ்வேளை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:38-40.
| 38அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.39திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.40அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார். கிறித்துவில் வாழ்வு: நெஞ்சைத் திருடும் தெய்வம் வந்து, நேரில் அழைக்கும் அவ்வேளை, கொஞ்சம்கூட அறியாததனால், கிறித்து போன்று வாழ்வோமே. நஞ்சை இன்று அமுது என்று, நம்பி வாழ்வை அழிக்காமல், கெஞ்சி நாமும் திருந்தி வாழ, கிறித்து முன்பு தாழ்வோமே! ஆமென். |
கிறித்துவில் வாழ்வு:
இங்கே யாரோ எச்சில் இடுவார்,
என்று நினைத்துப் பிழைக்காமல்,
அங்கேயிருந்து, அனைத்தும் காணும்,
ஆண்டவர் மகிழ ஊழைப்போமே.
தங்க மகனே தன்மண நாளில்,
தந்திடும் விருந்தில் பங்குபெற,
எங்குமெதிலும், என்னிலை வரினும்,
யாவிலும் உண்மை கொள்வோமே!
ஆமென்.
உண்மை ஊழியத்தின் பரிசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:35-37.
| 35உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், |
| 36தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள். |
| 37எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச்சொல்லுகிறேன். கிறித்துவில் வாழ்வு: இங்கே யாரோ எச்சில் இடுவார், என்று நினைத்து உழைக்காமல், அங்கேயிருந்து, அனைத்தும் காணும், ஆண்டவருக்கு ஊழைப்போமே. தங்க மகனே தன்மண நாளில், தன் கையாலே விருந்தளிக்கும், எங்குமில்லா நற்பேறடைய, எதிலும் உண்மை கொள்வோமே! ஆமென். |
இங்கே கொடுத்து அங்கே வாங்கும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:33-34.
| 33உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப்பிச்சைகொடுங்கள், பழமையாய்ப்போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை. |
| 34உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். கிறித்துவில் வாழ்வு: அங்கே வாங்கி, இங்கே கொடுக்கும், ஆண்டவர் விருப்பைப் புறக்கணித்து, இங்கே வாங்கி எதுவும் கொடாது, இழக்கின்றவரோ இன்னாட்டார். எங்கே சேர்த்தால் நிலைக்கும் என்னும், இறையறிவை உட்கொண்டு, பங்கம் இன்றி, பாங்காய்க் கொடுப்பின், பரத்திற்கவரே நன்வீட்டார்! ஆமென். |
ஒன்றைத் தேடுவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:31-32.
| 31தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். |
| 32பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். |
| கிறித்துவில் வாழ்வு: ஓன்று மட்டும் போதுமென்று, உம்மை நோக்கிப் பார்க்கையில், இன்று எங்கள் இல்லங்களில், இல்லை ஒரு குறையாம். சென்று பார்த்துத் தேடுகின்ற, சிற்றின்பமாம் வழிகளில், நின்று எவர் வேண்டினாலும், நேரிடாது நிறைவாம்! ஆமென். |
மின்தூக்கி பொருத்துவதாய் என்வீடு வந்தார்.
நன்மதி இல்லாதோர் நான்கு இலட்சம் எடுத்தார்.
பன்னெடு நாட்கள் துன்பந்தான் தந்தார்.
இன்னாளில் இறைமகனோ, நல்தீர்ப்பு கொடுத்தார்.
நன்றிகூறும்,
கெர்சோம் செல்லையா.
இயேசுவாக மாறுவோம்!
உண்மை இறைவன் நமைப் படைத்தாரே;
உடல் பொருள் ஆவியில் அறிவடைத்தாரே.
அன்பாய் வாழும் வழி கொடுத்தாரே;
அறம் விட்டவரோ, பழி எடுத்தாரே.
மண்ணில் மகனாய், இறை பிறந்தாரே;
மன்னிப்பென்னும் அருள் திறந்தாரே.
என்னே அன்பென இதை நினைப்பாரே,
இயேசுவாக, இறை இணைப்பாரே!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.
24, செயலகக் குடியிருப்பு, இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி,சென்னை-600099.