நீங்களும் நானும் வேண்டிடும் வேளை,

நிலத்தில் வேர்வை வடிந்ததுண்டோ?

தாங்கிடும் இறையின் மகன் மன்றாட, 

தரையில் குருதி வடிந்திடுதே.

ஏங்கிடும் மக்கள் நோக்கிடும் நாளை,

இன்றே கொணர முடிந்ததுண்டோ?

வாங்கிடும் அருளால் யாவும் கூடும்.

வருவோர் துன்பும் முடிந்திடுதே!

(லூக்கா 22:44).