தந்தையும் மைந்தனும் ஒன்றாய் இருந்து,
தரணியை ஆள்வது கண்டிட்டும்,
மைந்தர் என்கிற பேறுடை கிறித்தவர்,
மண்ணில் ஒன்றாய் இருக்கலையே.
நிந்தையும் பழியும் நித்தமும் சொரிந்து,
நெறியற்ற அலகை தண்டித்தும்,
மந்தையின் மேய்ப்பர், மறைப்பணி தலைவர்,
மனதை இணைத்துப் பெருக்கலையே!
(யோவான் 17)