இந்த நாளில் பல்வகைக் கருத்தால்,
இயங்கும் பற்பலக் கூட்டம் போல்,
அந்த நாளிலும் யூத இனத்தினர்,
அவரைப் பிரித்து நடந்தனர்.
சொந்த இனத்தின் விடுதலை நாடி
சொல் செயலாலே வெறியூட்டி,
எந்த மீட்பும் எதிலும் பெறாமல்,
இயாலாமையிலே கிடந்தனர்!
The Truth Will Make You Free
வாழ்த்துகள்!
இந்திய விடுதலை நாள்
வாழ்த்துகள்!
பஞ்சம் பசி பிணி, பாழாக்குகிற ,
பாரதம் என்று கிடக்காமல்,
கொஞ்சம் கூட குறைவில்லாமல்,
கொழிக்கும் நாடாய் எழுக.
வஞ்சம் வைத்து, பிறரையழிக்கும்,
வல்லமை தேடி நடக்காமல்,
நெஞ்சம் நிரப்பி, வாழ வைக்கும்,
நேரிய நாட்டைத் தொழுக!
-கெர்சோம் செல்லையா.
எந்த மலையென யானும் அறியேன்;
இயேசு அமர்ந்து பொழிகிறார்.
தந்தை இறையின் அரசிற்கழைத்து,
தாழ்மை நாடி மொழிகிறார்.
இந்த நாளிலும் இதுபோற் செய்தி,
இல்லை என்றே சொல்கிறார்.
நைந்த நெஞ்சும் செம்மையாகும்,
நேர்வழி வந்தோர் வெல்கிறார்!
(மத்தேயு: 5-7)