யாருக்குப் புகழ்ச்சி?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:24-26.
24 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.
26 அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
தம்மை அனுப்பிய தந்தை மகிழத்
தரணியில் இயேசு வாழ்ந்தாரே.
நம்மை அனுப்பும் மைந்தன் மகிழ,
நன்மை செய்து வாழ்ந்தோமா?
உம்மை ஒருவர் இப்படிக் கேட்பின்,
உமது வாழ்க்கை என் சொல்லும்?
செம்மை இல்லை என்பதனாலே,
சீர்பட இயேசு முன் நில்லும்!
ஆமென்.
