அத்திருச்சட்டம் கொடுத்த நாளில்,
ஆண்டவர் செய்த உடன்படிக்கை,
பத்திரமாக இசரயெல் காக்க,
இத்திருச்சட்டம் பெற்ற மக்கள்,
இதன்படி ஒழுகி நடப்பதற்கு,
ஒத்துழைக்கும் தலைவரும் தந்தார்;
ஒழுக்கமும் வளர்ந்து படர்கிறது!
(விடுதலைப் பயணம் 18-24)

The Truth Will Make You Free
பாலை நிலம் வழி செல்லும் நாளில்,
பருகிடத் தண்ணீர் கிடைக்காமல்,
காலை தொட்டு மாலை வரையில்,
கடுஞ்சினத்துடன் தேடினார்.
கோலை எடுத்து மோசே அடிக்க,
கொடுக்கும் பாறை கிறித்துவால்,
நாளை உயிர் நீர் நாமும் பெறுவோம்;
நம்பாதவர்தான் வாடினார்!
(விடுதலைப் பயணம் 17:1-7).