உன்னை விட்டு, விலகவும் மாட்டேன்,
ஒருபோதும் கை, விடவும் மாட்டேன்
என்றும் எங்கும், உன்னோடிருப்பேன்.
அன்றதை நம்பி, யோசுவா சென்றார்.
ஆண்டவராலே, தலைவருமானார்.
இன்றிதைக் கேட்டு, நடப்பவர் யாரோ?
எங்கள் தலைவரோ, பிழைத்தார்!
(யோசுவா 1:1-9)

The Truth Will Make You Free
ஏசாயா பதினான்கு எடுத்துரைக்கும் பேரறிவு,
இன்றும் பேசுவதால் எழுதுகிறேன்.
ஓசையாய் ஒரு கூட்டம் ஓயாது பொய்யுரைத்து,
உண்மை பூசுவதால் எழுதுகிறேன்.
பேசாமல் இருப்போரின் பிழைகள் திரும்பி வந்து,
பிண வாடை வீசுவதால் எழுதுகிறேன்.
மாசான கருத்தியலில் மாட்டியவர் மீட்படைந்து,
மறை மணம் வீசிடவே எழுதுகிறேன்.
-கெர்சோம் செல்லையா.
