ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நூலை,

உணர்ந்தவர் தந்தார் உள்ளில் கேட்டு.

செவ்விளக்குருதி துடித்தெழும் நாளில்,

சிந்தையில் வடித்தார் இனியப் பாட்டு.

அவ்விதமாக வளர்ந்தவர் வரைந்தார்;

அடுத்த நூலோ அறமொழித் திரட்டு.

எவ்வித வாழ்விலும் இருக்கிற மாயை;

இறையால் மாற, இறுதிநூல் புரட்டு!

(இனிமைமிகு பாடல், நீதிமொழிகள், சபை உரையாளர்)

May be an image of 1 person and text

எது எது வேண்டும் என்றிறை கேட்டால்,

எதை நாம் இன்று கேட்கிறோம்?

புது விதமான ஆவல்கள் தொட்டால்,

புழுதிக் காற்றில் முடிக்கிறோம்.

பொது அறிவென்று சாலமொன் கேட்டு,

புது நூல் யாத்ததும் காண்கிறோம்.

இது போல் இன்று இறையடி தொட்டு,

ஏங்கின் அறிவு பூணுவோம்!

(1 அரசர்கள் 3:5-15)

May be an image of 1 person and text

படுத்த படுக்கையில் தாவிது விழவே,

பார்க்கும் மக்கள் நலம் பேண,

அடுத்த அரசனைத் தேர்வு செய்தார்;

அவன்தான் அறிஞன் சாலொமன்.

தொடுத்த போர்களை முடித்து எழவே,

தொடர்ந்து அமைதி இவன் காண,

எடுத்த பேறாய் மக்கள் மகிழ்ந்தார்;

இன்று ஏங்குதே நிலமண்!

(1 அரசர்கள் 1&2)

May be an illustration of text

ஆடு மேய்த்த தாவிதை அழைத்து,

அரசு தந்ததும் இறையருளே.

நாடு காத்திட சந்ததி தெரிந்து,

நடத்தி வந்ததும் இறையருளே.

வீடு பேறு வழங்கும் வழிக்கு,

விண் தேர்வதும் இறையருளே.

தேடு நண்பா, இறையைத் தேடு;

தெய்வ அறிவும் இறையருளே!

(2 சாமுவேல் 7).

May be an image of text

தன்னிலை விளக்கும் பாடல்கள் தந்தும்

தாவிது இறையைப் புகழ்கிறார்.

முன்னறிவோடு இறை வாக்குரைக்கும்,

முழுமைப் பற்றிலும் திகழ்கிறார்.

இந்நிலம் மீட்க வருபவர் ஒருவர்,

இவர் வழித்தோன்றல் என்கிறார்.

சொன்னவை பாடி, சுவைப்பவர் கோடி;

சொந்தமாம் பேறும் உண்கிறார்!

(தாவிதின் திருப்பாடல்கள்)

May be an image of 1 person and text

ஆயனாயிருந்து அரசனாய்ச் சிறந்தும்,

அவரிலும் தவறு இலாமலில்லை.

நேயனாய்த் திருப்பாடல்கள் வரைந்தும்,

நேர்மைக் குறை தொலையவில்லை.

சேயனாய்த் தாழ்ந்து, திருந்தும் வரைக்கும்,

செய்தவை விளையாதிருப்பதில்லை.

தூயனாய் மாற்றும் தெய்வ உரைக்கும்,

திருந்தார் வாழார், மறுப்பதில்லை!

(2 சாமுவேல் 11-12:25)

May be an illustration of 2 people

தடைக் கற்களை உடைத்துப் போடும்

தாவிது, ஈசயின் புதல்வன்.

கடைக்குட்டியாகப் பிறந்திருந்தாலும்,

கடவுள் கணக்கில் முதல்வன்.

இடைப்பட்ட நாளில், துன்புகள் கண்டும்,

இறைப் புகழ் பாடிய புலவன்.

கிடைத்த அருளை வளர்த்தி,வழங்கும்,

கேட்போர் போற்றும் தலைவன்!

(1 & 2 சாமுவேல்)

May be an image of 1 person and harp

நாட்டை நினைத்து நன்மை செய்யும்

நல்ல தலைவர் நாடுகிறோம்.

கோட்டை விட்டச் சிலரைக் கண்டும்,

குறுகி நெஞ்சம் வாடுகிறோம்.

ஏட்டை எடுத்து இறை சொல் கேட்டு,

எவரும் உண்டோ, தேடிடுவோம்.

ஆட்டை மேய்த்த தாவிது கண்டு,

அவரது புகழ் பாடிடுவோம்!

(2 சாமுவேல் 2-5:-5).

May be an image of 1 person, flute and harp

இருபது கடவா அகவை கொண்டும்,

இவரில் இருந்த இறைப் பற்று,

சிறுமை செய்வதை அழிக்கத் தூண்டும்,

செய்திச் சுரங்க அருள் ஊற்று.

அறுபது எழுபது என்றெனத் தாண்டும்,

அகவையுள்ளோர் இது கற்று,

வறுமை சிறுமை ஒழித்திட வேண்டும்,

வாழும் திரு மறைக் கூற்று!

(1 சாமுவேல் 16-18))

May be an image of 1 person

தொடங்கிய அரசு முடங்கிப் போன,

தோல்வி நிறைந்த அந்நாளில்

இடையர் ஒருவர் எழுந்து வந்தார்

இவர்தான் எளிய தாவீது.

படைவலி அல்ல, பற்றில் காண,

பாடித் திரிந்த அவர் காலில்

கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.

கேட்பீர் அரிய மா தூது!

(1& 2 சாமுவேல்).

May be a graphic

தொடங்கிய அரசு முடங்கிப் போன,

தோல்வி நிறைந்த அந்நாளில்

இடையர் ஒருவர் எழுந்து வந்தார்

இவர்தான் எளிய தாவீது.

படைவலி அல்ல, பற்றில் காண,

பாடித் திரிந்த அவர் காலில்

கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.

கேட்பீர் அரிய மா தூது!

(1& 2 சாமுவேல்).

May be a graphic