நற்செய்தி மாலை: மாற்கு 4:9
நல்ல நிலமாய் நானும் திகழ……
நல்ல நிலமாய் நானும் திகழ…
முள்ளில் விழுந்த விதைகள்!
முள்ளில் விழுந்த விதைகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 5:7
“மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.”
நற்செய்தி மலர்:
முள்ளில் விழுந்த விதையைப் போன்று,
முழுமையின்றி வளர்கின்றோம்.
கள்ளில், வெறியில் கவலை தோய்த்து,
காய் கனியின்றித் தளர்கின்றோம்.
எள்ளின் முடிவு எண்ணெய் ஆகும்;
இதை மறந்து உலர்கின்றோம்.
தள்ளாதவரின் அருளைக் கேட்போம்;
தவறு நீங்கும்; பலன் தருவோம்!
ஆமென்.
புல்லும் வளராப் பாறை!
வேறுபாடு பாரா இறைவன்!
வேறுபாடு பாரா இறைவன்!
நற்செய்தி மாலை: மாற்கு 4: 1-4.
“அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது: ‘ இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.”
நற்செய்தி மலர்:
வேறுபாடு பாரா இறைவன்
வீதியிலேயும் விதைக்கின்றார்.
நூறு நூறாய் பலன் தரவே,
நொந்த நெஞ்சில் பதைக்கின்றார்.
மாறுபாடு கொண்டோரையும்
மகிழ்விப்பதற்கே உழைக்கின்றார்.
தேறுதல் நாம் வாழ்வில் பெறவே,
தெய்வம் அரசுள் அழைக்கின்றார்!
ஆமென்.
இறைவனின் மக்கள்
உள்ளே வராத உறவுகள்!
உள்ளே வராத உறவுகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:31
“அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.”
நற்செய்தி மலர்:
உயர்ந்த நிலையில் இருப்பாரென்றால்,
உறவுகள் யாவும் வீட்டுள் வரும்.
ஊழியன் என்று ஊரில் அலைந்தால்,
உடன் பிறப்பும் வெளியேறும்!
அயர்ந்து துவண்டு போக வேண்டாம்;
ஆண்டவர் நிலையைப் பார்த்திடுவோம்.
அதுதான் நமக்கும் என்றறிந்து,
அவரது பணியைத் தொடர்ந்திடுவோம்!
ஆமென்.

செயல்களை நம்புவோமே!
பார்ப்பதைப் புரிந்து நம்புவோமே!
நற்செய்தி மாலை: மாற்கு 3:28-30.
“உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். ‘ ‘ இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது ‘ என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.”
நற்செய்தி மலர்:
நற்செய்தி நாங்கள் கொடுக்கையிலே,
நம்ப மறுக்கும் நண்பர்களே,
அற்புதச் செயல்களின் வடிவினிலே,
ஆண்டவர் வாக்கு ஒலிக்கிறதே!
பொற்பரன் ஆவியர் பணிகளிலே,
புரிவோம் இறைவன் அன்பினையே!
பற்பல விளக்கங்கள் தேவையில்லை;
பார்ப்பதைப் புரிந்து நம்புவமே!
ஆமென்.

யார் முதலில் வணங்கவேண்டும்?
வணக்கம், வாழ்த்துகள்!
நம்மை விடவும் வலியோன்!
நம்மை விடவும் வலியோன்!