இறை காண்போம்!
மெய்யே இறையென்று,
மேதினியில் நாம் சொல்வோம்.
பொய்யும் அதன் விளைவும்,
பொய்த்திடவே, அதை வெல்வோம்.
செய்வது நன்மையென்றால்,
செய்பவர் இறையென்போம்.
ஐயம் இனி வேண்டாம்.
அன்பினில் இறை காண்போம்!
-கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
இறை காண்போம்!
மெய்யே இறையென்று,
மேதினியில் நாம் சொல்வோம்.
பொய்யும் அதன் விளைவும்,
பொய்த்திடவே, அதை வெல்வோம்.
செய்வது நன்மையென்றால்,
செய்பவர் இறையென்போம்.
ஐயம் இனி வேண்டாம்.
அன்பினில் இறை காண்போம்!
-கெர்சோம் செல்லையா.

இறைவழி!
இருக்கும் இடத்தை ஏதேனாக்கும்
எளிய தொண்டில் இறை பாரும்.
செருக்கும் வெறுப்பும் தீங்குருவாக்கும்.
செய்ய மறுப்பின் குறை தீரும்.
பெருக்கும் ஊற்றாய் அன்பு சுரக்கும்
பெருந் தன்மையே இறையாகும்.
நெருக்கும் தொல்லை தருவோருக்கும்,
நேர்மைப் பரிசே, முறையாகும்!
-கெர்சோம் செல்லையா.

ஆவியர் வழிநடத்தல்
இறைவாக்கு: லூக்கா 2:26-28.
26 கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
28 அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
கிறித்துவில் வாழ்வு:
நாளை நடப்பதை நாம் அறியோம்;
நடத்தும் ஆவியர் அறிகின்றார்.
வேளை வருமுன் பணிமுடிக்க,
வேண்டும் வலுவும் தருகின்றார்.
ஏழை என்னால் இயலாது,
என்று எங்கும் கூறாது,
தோழர் ஆவியர் துணை கேட்டு,
தொடர்வோருக்கு அருள்கின்றார்!
ஆமென்.

நற்றமிழை நாம் அழித்தோம்!
இறைப் பற்றும் நேர்மையும்!
இறைவாக்கு: லூக்கா 2:25.
25 அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
இறைவாழ்வு:
இறைப் பற்று கொண்டவர் என்றால்,
இறைவனின் பண்பு பெற்றிடவேண்டும்.
நிறைவான நேர்மை வழியில்,
நித்தம் நடந்து கற்றிட வேண்டும்.
குறைப் பேறாய் பிறந்த நானோ,
குற்றம் பெருகத் தலை குனிந்தேன்.
சிறைப் பறவை ஆகாதிருக்க,
சீரேசுவே உமைப் பணிந்தேன்!
ஆமென்.

தூத்துக்குடியில் ஒரு கூத்தாடி!
பட்டவனுக்கே பட்டினி தெரியும்;
பார்ப்பானுக்குத் தெரியாதே!
(பார்க்கின்றவனுக்குப் புரியாது என்று பொருள் கொள்க!)
கெட்டவனுக்கே குறைகள் தெரியும்;
கெடுக்கும் இவரிடம் சரியாதே!
முட்டாள்கூட கற்றுத் தேர்வான்;
முதலில் நடன் பின் செல்லாதே.
கொட்டும் மக்கள் சினத்தின் முன்பு,
கோணல் அறிவு நில்லாதே!
-கெர்சோம் செல்லையா.

ஒப்புக்கொடுத்தல்!
இறைவாக்கு: லூக்கா 1:22-24.
22 மோசேயின் நியாயப்பிரமாணத்தின் படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,
23 முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,
24 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
இறைவாழ்வு:
உடல் பொருள் ஆன்மா உயிரைக் கொடுக்கும்,
கடவுளை வணங்கக் கற்புடன் வாரீர்.
மடை திறந்தாற்போல், மாண்புகள் பெருகும்;
தடையும் இல்லை; இறையிடம் சேரீர்.
இடை வாழ்நாளில் இறைவன் அளிக்கும்,
இனிய செல்வம் குழந்தை பாரீர்.
குடை நிழலாகக் குடும்பம் காக்கும்,
கடவுட் கையில் அதனைத் தாரீர்.
ஆமென்.

காசு பேசும் காலம் இது;
மாசு என்றால் கேளாது!
தூசு போல நமை நினத்தார்,
தூத்துக்குடியை வதைத்து!
-கெர்சோம் செல்லையா.
உங்கள் கண்கள் எங்கே?
உங்கள் வீட்டின் இழவிற்கெல்லாம்
எங்கள் நெஞ்சு அழுததே.
எங்கள் வீட்டின் இழப்பைக் கண்டு
உங்கள் கண் ஏன் நழுவுதே!
தங்கள் பதவி, பணத்தைக் காக்கும்
தலைமை வேண்டாம், போதுமே!
இங்கே இனிமேல் இறைதான் தலைவர்;
இறைவன் வாக்கு ஓதுமே!
-கெர்சோம் செல்லையா.

Want to tag S.s. Davidson?
மனித நேயம் கொன்றோம்!
தூய நீரும் காற்றுந்தானே,
தூத்துக்குடியார் கேட்டார்.
நேயமற்ற பாவியரோ,
நெஞ்சிலும் வாயிலும் சுட்டார்.
ஆயரைத்தான் அரசன் என்று,
அந்த நாளில் கொண்டோம்.
மாயமாகும் மண்ணாட்சியில்,
மனித நேயம் கொன்றோம்!
-கெர்சோம் செல்லையா.
