திரண்டு வந்த பெருங் கூட்டத்தார்,
முரண்டு நிற்பது வேண்டாமென்று,
முழுகி யெழுந்து, திருந்துகிறார்.
இரண்டு உள்ளோர் ஒன்று கொடுத்தார்;
ஏழைக்கிரங்க முன் வந்தார்.
புரண்டு தூங்கும் புரியாதினத்தார்,
போக்குரைத்து, பின் நொந்தார்!
(லூக்கா 3:1-18)

The Truth Will Make You Free
அறிஞர் திரும்பி வராதது கண்டு,
அரசன் வெறியில் துடிக்கிறான்.
சிறுவர் பலரில் ஐயம் கொண்டு,
சினத்தில் கொன்று முடிக்கிறான்.
வறிஞர் என்பார் அறிவிலும் உண்டு;
வாழ நினைப்போன் படிக்கிறான்.
புரிவாய் நண்பா, புனிதத் தொண்டு;
புரியா ஏரொது வெடிக்கிறான்!
(மத்தேயு 2).
விட்டிடு கொடுமை!
ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்;
ஒளித்திருந்து வெறியர் கொன்றார்.
யாரைக் காக்க இவரைக் கொன்றார்?
இல்லை நற்பதில், தராது சென்றார்.
போரைத் தவிர்ப்பீர், பேசிட வாரீர்.
புரிதல் பெற்று, இணையப் பாரீர்.
நீரை வடிக்கும் குடும்பமும் பாரீர்.
நினைந்து, திருந்தி, வாழ, வாரீர்!
-கெர்சோம் செல்லையா.