கல்லில் எழுதி கட்டளை கொடுத்தார்;

கடவுட் கட்டளை ஆய்வோமா?

சொல்லில் நான்கு இறையுறவென்றார்;

சொற்படிப் பணிய, செய்வோமா?

நல்லுறவில் நாம் பிறருடன் வாழ,

நான்குடன் இரண்டு அவர் த்ந்தார்.

எல்லையில்லா இறை பேரன்பை,

யாவரும் அணிய, பத்தீந்தார்!

(விடுதலைப் பயணம் 20:1-17).

May be an image of 1 person and text that says 'หวคม பத்து கட்டளைகள் என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 2. யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். 3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. 4. ஒய்வராளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. 5. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்னுவாயாக. 6. கொலை செய்யாதிருப்பாயாக. 7. விபசாரம் செய்யாதிருப்பாயாக. 8. களவு செய்யாதிருப்பாயாக. 9. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி Dis சொல்லாதிருப்பாயாக. 0. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக. யாத்திராகமம் 20 3-17. BIBLE WORDS'

பிறக்கச் செய்பவர் இறைவனாதலால்,

பிறப்போர் எவரும் இறை மக்கள்.

உறவுக் கூட்டில் முன் பின் உண்டு.

ஒவ்வொரு இனமும் அவர் மக்கள்.

இறை வாழ்வென்னும் மீட்பு சொல்லும்,

ஏற்பாட்டில் யார் முதல் மக்கள்?

அறத்தின் திட்டம், ஆண்டவர் சட்டம்,

அடைந்த இசரயெல் மக்கள்!

(விடுதலைப் பயணம் 19 & 20).

May be an image of text

பாலை நிலம் வழி செல்லும் நாளில், 

பருகிடத் தண்ணீர் கிடைக்காமல்,

காலை தொட்டு மாலை வரையில், 

கடுஞ்சினத்துடன் தேடினார்.

கோலை எடுத்து மோசே அடிக்க, 

கொடுக்கும் பாறை கிறித்துவால்,

நாளை உயிர் நீர்  நாமும் பெறுவோம்;

நம்பாதவர்தான் வாடினார்!

(விடுதலைப் பயணம் 17:1-7).

மிகுதியாய்ப் பலபேர் ஓடி எடுத்தும்,

மீதியாய் மன்னா நிரப்பவில்லை.

பகுதியில் கொஞ்சம் கை பிடித்தும்,

பசித்து, குறைவென இரக்கவில்லை.

தகுதியும் பண்பும் பலவாயிருந்தும்,

தருவதில் வேறு படவில்லை.

யகுவா போதும், என்று திருந்தும்,

எவரையும் கை விடவில்லை!

(விடுதலைப் பயணம் 16).

May be an image of stone-fruit tree and text that says 'Whoever gathered much had nothing left over, and whoever gathered little had no lack. lillieamma.com 2 Corinthians 8:15'

நீண்ட நெடிய பயணம் செல்ல,

நீங்களும் நானும் எண்ணின்,

வேண்டுமளவு உணவு உண்ண,

வெளியாளையே நாடுவோம்.

ஆண்டவரோ அந்தக் காட்டில்,

அன்றாடம் அவர் உணவிற்கு,

தேன் இனிப்பின் மன்னா தந்தார்.

தெய்வத்தையே தேடுவோம்!

(விடுதலைப் பயணம் 16).

May be an image of text

செயல்பட வழியொன்று காணா நிலையில்,

செய்தியை இறையிடம் சொல்லுங்கள்.

புயலெனக் காற்று, பெருங்கடல் அலையில்,

புது வழி திறந்திடும், செல்லுங்கள்.

அயலினத்தார் நமை ஆண்டிட வருகையில்,

அவரே அமிழ்கிறார், சொல்லுங்கள்.

வெயிலோ, மழையோ, தெய்வம் தருகையில்,

விண்ணைப் பார்த்து, செல்லுங்கள்!

(விடுதலைப் பயணம் 14).

May be an image of arctic

வேறு வழியற்றதாலே விடுவித்தார்.

விட்ட பின் எகிப்தியர் ஒடுகிறார்.

ஆறு நூறு தேரிலே விரைந்தார்;

அக்காடெங்கிலும் தேடுகிறார்.

பேறு நிறைந்த இசரயெல்லரோ,

பெருங்கடல் முன்பு வாடுகிறார்.

யாருமுதவிட இயலா நிலையில்,

இறையே கடத்தி விடுகிறார்!

(விடுதலைப் பயணம் 14).

May be an image of horizon, beach, ocean and water

எழுபது பேராய் எகிப்திற்கு வந்தோர்,

இருபது இலட்சமாய்க் கடக்கிறார்.

அழுவது தானே தம் நிலை என்றோர்,

ஆர்ப்பரித்தவராய் நடக்கிறார்.

விழுவது பார்வோன் வீம்பென்றறியார்

விரும்பி இன்றும் கிடக்கிறார்.

தொழுவது இறையெனக் கீழ்ப்படிந்தார்

தோல்வித் தடைகளை உடைக்கிறார்!

(விடுதலைப் பயணம்:12).

May be an image of the Great Sphinx of Giza

அழிக்கும் தூதன் அனைத்தும் அழிக்க,

அவன் கை படாது தப்பிட,

பலிக்கும் இறை சொல் விடாது கேட்டு,

பலி ஆடடித்தது இசரயெல்.

உலுக்கும் கூக்குரல் ஊர்களில் ஒலிக்க,

ஓரின விடுதலை செப்பிட,

இழுக்கும் நெஞ்சில் இரக்கம் தொட்டு

இணைத்தால் நாமும் இசரயெல்!

(விடுதலைப் பயணம்:12)

May be an image of 6 people

பத்தாம் துன்பம் பழி தீர்த்திடவே

பார்வோன் உள்ளம் தளர்ந்தது.

கத்தியும் கல்லும் தொடாமலேயே,

காணா விடுதலை மலர்ந்தது.

இத்தனை அடிமைகள் விடுதலையாக,

இவர்களின் ஆயுதம் என்னவாம்?

புத்தியுள்ளவர் அறிந்து கொள்வார்

பொய் பேசாயிறை சொன்னதாம்!

(விடுதலைப் பயணம்: 12).

No photo description available.