பல்வலிப் பாடல்!
பற்கள் இருப்பது வலிக்கேயென்றால்,
பசியே என்னைத் தொடாதே!
புற்கள் நிறைந்தது வயலேயென்றால்,
புசிப்பது கண்ணில் படாதே!
சொற்கள் தருவது தீமையேயென்றால்,
சொந்தக் கருத்தைக் கொடாதே!
பிற்காலத்தில் அறுப்பதை நினைப்பாய்;
பிழைத்த வினைகள் விடாதே!
-கெர்சோம் செல்லையா.
