கடவுள் எங்கே?
கடவுளைக் காண விருப்பிருந்தால்,
கடவுள் தன்னைக் காண்பிப்பார்.
காண விரும்பார் கண்டடையார்;
கலங்கி இல்லை என்றுரைப்பார்.
படைப்பின் வழியாய்க் காண்பித்தார்;
பாரிலுள்ளோர் இதைப் பார்த்தார்.
பார்த்தவர் தவறிப் பார்த்துவிட்டார்;
படைப்பைத் தெய்வமாய்ச் சேர்த்துவிட்டார்.
இடைப்பட்ட நாளில் வெளிப்பட்டார்;
இசுரவேலரைத் தேர்வு செய்தார்.
எழுதிய சட்டம் இவர்க்களித்தார்;
இவரோ எதிர்த்து அருள் இழந்தார்.
கடைசி நாட்களில் காட்சி தந்தார்;
கனிந்து மகனாய் வெளி வந்தார்.
காண விரும்பின் இயேசுவைப் பார்;
கடவுள் அன்பாய் இருக்கின்றார்!
-கெர்சோம் செல்லையா.
