கிறித்துவின் குரல்!

இயேசுவின் குரல்!

இறை மொழி: யோவான் 20:16.

16. இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

இறை வழி:

காணாக் கண்கள் கலங்கும் நேரம்,

கடவுட் குரலொலி கேட்கிறது.

வீணாய்ப் போன விளிம்பின் ஓரம்

விரைந்து மானிடம் மீட்கிறது.

ஏனோ தானோ என்பவர் வீரம்

இறையொலி முன்னர் வீழ்கிறது.

நானே தந்தேன் என்றே கூறும்

நல் நம்பிக்கை வாழ்கிறது!

ஆமென்.

May be a graphic of text that says 'POWER THE OF GOD'S WORD'

ஏன் அழுகின்றாய்?

ஏன் அழுகின்றாய்?

இறை மொழி: யோவான் 20:15.

15. இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக் கொள்வேன் என்றாள்.

இறை வழி:

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே,

ஏன் நெஞ்சே நீ அழுகின்றாய்?

நன்னாயர் இயேசு காக்கையிலே,

நம்பாது யாரைத் தொழுகின்றாய்?

உன் கண்ணீர் கவலை நொறுக்கையிலே,

உன்னுடன் இருப்பவர் அவரல்லவா?

இன்னாளில் இதனை மறக்கையிலே,

இழப்பது வாழ்வு, தவறல்லவா?

ஆமென்.

May be an image of 1 person and text that says '"Woman, why are you weeping?" John 20,15'

காண்கிறார்… ஆயினும்

காண்கிறார்… ஆயினும் அறியவில்லை!

இறை மொழி: யோவான் 20:14.

14. இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

இறை வழி:

இன்றும் இதுபோல் காண்கிற நாமும்

இயேசுவின் உயிர்ப்பை அறிந்தோமா?

நின்றும் குதித்தும் பாடும் போதும்,

நிலைவாழ் உயிர்ப்பு அறிவோமா?

நன்றாய்ப் பாடி, துள்ளிக் குதித்தோம்;

நற்பணி செய்யவே உயிர்த்தோமா?

அந்நாள் யாவரும் எழும்பும் காலம்,

அவருடன் ஆள உயிர்ப்போமா?

ஆமென்.

May be an image of 2 people

நம்பிக்கையோடு நிற்றல்!

நம்பிக்கையோடு நிற்றல்!

இறை மொழி: யோவான் 20:11-13.

11. மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,

12. இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.

13. அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

இறை வழி:

நம்பும் மனிதர் நிலைத்து நின்றால்,

நன்றாய்க் காண்பர் அதிசயம்.

சும்மாச் சொல்லி செல்வது என்றால்,

சொல்லால் வருமோ அதிசயம்?

செம்மொழித் தமிழில் எழுதித் தந்தால்,

சேர்ப்பீரா இறை அதிசயம்?

இம்மாப் பற்று பெருகி வந்தால்,

யாவரும் காண்போம் அதிசயம்.

ஆமென்.

May be an image of text that says 'STAND FIRM'

நம்புவீர்!

நம்புவீர்!

இறை மொழி: யோவான் 20: 9-10.

9. அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.

10. பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

இறை வழி:

ஊனுடல் உயிர்ப்பை ஒவ்வார் இன்று,

உண்மை இல்லை என்கிறார்.

வானுடல் எடுத்து வாழ்வோமென்று,

வாய்மை மறந்து தின்கிறார்.

பேணுடல் தொழிலே பெரிதெனக் கொண்டு,

பிழைத்தால் எப்படி உண்ணுவார்?

நாணுவராகி, நலிவினைக் கண்டு

நம்பின், நன்மை எண்ணுவார்!

ஆமென்.

May be an image of text that says 'He IS RISEN John 20:1-9'

Jasmine Acca!

My Great Grandfather, Rev. Vethamanickam of Osaravilai CSI Church (formerly LMS in Kanyakumari and surrounding areas) had 5 daughters and one son. The eldest daughter Gnanavadivu and her family moved to Colombo in the early forties of the last century. Later, some of her descendants came back to Nagercoil and Neyyoor and settled there.

However, the family of Jasmine Acca migrated to Germany, after miraculously escaping the genocidal tide of violence in 1983. Two of her sons are with her now there in Germany and the other two had gone to Canada and the United Kingdom.

This Jasmine Acca had paid a short visit to Chennai and we were in fact blessed of meeting her at our Secretariat Colony residence.

See, how the children are blessed of a servant of God, who died in utter poverty in an unknown village!

O Lord, your ways are in deep waters! Who’s here to find and follow your blessed footsteps, Lord?

May be an image of 3 people, people smiling and hospital

சீலைத் துணிகள்!

இறை மொழி: யோவான்:20:6-8.

சுருட்டி வைக்கப்பட்ட சீலைத் துணிகள்!

இறை மொழி: யோவான்:20:6-8.

6. சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,

7. சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.

8. முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.

இறை வழி:

உருட்டப்பட்ட கல்லே சொல்லு;

உண்மை நிகழ்ச்சியே சொல்லு.

சுருட்டி வைத்த துணியே சொல்லு,

தூயோன் எழுச்சியே சொல்லு.

புரட்டு மனிதர் விரைந்து முடித்து,

பிடிபடாதிருக்கப் பறப்பாரா?

திருட்டு பழியா? வரட்டும் என்று,

துணியை மடித்து நிற்பாரா?

ஆமென்.

May be an image of text that says 'So the other disciple who had first come to the tomb then also entered, and he saw and believed. John 20:8 Knowing-Jesus.com'

முன்னே ஓடிய யோவான்!

முன்னே ஓடிய யோவான்!

இறை மொழி: யோவான் 20:3-5.

3. அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.

4. பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,

5. அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.

இறை வழி:

முன்னே ஓடும் வலிமை பெற்றும்,

முதிர்ச்சி அற்றதால் நிற்கின்றான்.

பின்னே இதனை உணர்ந்து சற்றும்

பெருமை அற்றுச் சொல்கின்றான்.

தன்னை முழக்கும் தம்பட்டமல்ல,

தலைவனின் மாண்பே நற்செய்தி.

இன்னாள் இதனைப் புரியும் நல்ல,

இறைப்பணி இலாமை, துர்ச்செய்தி!

ஆமென்.

May be an image of 2 people

உண்மை அறியும் முன்னே!

உண்மை அறியும் முன்னே!

இறை மொழி: யோவான் 20:1-2.

1. வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.

2. உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.

இறை வழி:

இருந்த கல்லும் அங்கே இல்லை;

இயேசு உடலும் தெரியவில்லை.

வருந்தி சென்ற மகதல மரியும்,

வந்த நிகழ்வை அறியவில்லை.

புரிந்து ஒன்றை அறியும் முன்னே,

பேசுமுரையில் உண்மையில்லை.

திருந்தி நாமும் தெளிவாய் நோக்கி,

தேடாதிருப்பின் நன்மையில்லை!

ஆமென்.

May be an image of text

நல்லடக்கம்!

நல்லடக்கம்!

இறை மொழி: யோவான் 19:41-42.

41. அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.

42. யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.

இறை வழி:

சில்லறைக் காசு எதுவுமில்லாமல்,

செய்தி போல் வாழ்ந்து இறந்தவர்,

கல்லறைக் காட்சி நன்கு அடைந்தது

காண்பவர் கண்ணில் விந்தையே.

நல்லறம் செய்து நலிந்தவர்க்குதவி,

நாவிலும் தீதைத் துறந்தவர்,

இல்லார் என்று இறந்து கிடப்பது,

எப்படி ஏற்பார் நம் தந்தையே?

ஆமென்.

No photo description available.