தீதை அடக்கும் வழிமுறை உண்டோ?
தெய்வத்திடம் நாம் கேட்போமே.
பாதை தெரியார் காண்பது என்றோ?
பார்த்து அவரையும் மீட்போமே.
நீதி நன்மையே உயர்வு கொடுக்கும்;
வாதை என்று வாயிலில் கிடக்கும்,
வலிய தீதை ஆள்வோமே!
(தொடக்க நூல் 4:7)

The Truth Will Make You Free
ஒவ்வொரு படைப்பும் கண்டு,
இறையே மகிழ்வு கொண்டு,
அவ்வகை அனைத்தும் நன்று,
என்று சொன்னார் அன்று.
இவ்வித படைப்பில் மிக நன்று
எவ்விதத்திலும் மனிதனென்று,
இறை வாக்குரைப்பதுண்டு.
இப்படிச் சொல்கிற போது
எப்படி என்பாருமுண்டு.
தப்புகள் நீங்கும் என்று,
தருகிறேன் ஏது இன்று.
ஒப்பிலாப் பிறவி மனிதர்;
உண்மையில் இறை சாயல்.
அப்படியாகத்தான் படைத்தார்;
அனைவரையுமே அன்று!
(தொடக்க நூல் 1:4-27)