நாலடி நற்செய்தி!
சிறு ஆணி!
யாருக்கும் அடிமை ஆகாதே.
யாரையும் அடிமை ஆக்காதே.
தேருக்கும் தேவை சிறு ஆணி.
தெரிந்து வாழு, நீ ஞானி!
-செல்லையா.
The Truth Will Make You Free
நாலடி நற்செய்தி!
சிறு ஆணி!
யாருக்கும் அடிமை ஆகாதே.
யாரையும் அடிமை ஆக்காதே.
தேருக்கும் தேவை சிறு ஆணி.
தெரிந்து வாழு, நீ ஞானி!
-செல்லையா.
பொறுத்தல்!
நற்செய்தி: யோவான் 8:11.
நல்வழி:
பொறுத்துக் கொள்ளல் இறையின் அன்பு;
பொல்லார் நமையும் பொறுக்கிறார்.
வெறுத்துத் தள்ளல் குறையின் பண்பு.
வெளிச்சம் இல்லார் வெறுக்கிறார்.
அறுத்துச் செல்லும் அழிவு தடுப்பார்,
அன்புப் பொறுத்தல் பெருக்கிறார்.
மறுத்துத் திரிவின், மாண்பு கெடுப்பார்;
மத வெறியாலே சிறுக்கிறார்.
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
யோவான் 8:10.
நல்வழி:
உளச்சான்று வேலை செய்தால்,
ஒருவரையும் கல்லெறியோம்.
கிளைச்சான்றும் நாம் தேடோம்;
கேடு கெட்ட சொல்லெறியோம்.
பழச்சாற்றின் இனிமையெனும்,
பண்புகளால் நாம் நிறைவோம்.
இழக்காமல் இவை வளர்ப்போம்;
இன்னொருவர் குறைகூறோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
தவறே செய்யாதொருவர்!
நற்செய்தி: யோவான் 8:9.
9. அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
நல்வழி:
தவறே செய்யாதொருவர் வந்து,
தன் கையாலே கல்லெறிவீர்.
அவரே பிறரைத் தண்டிப்பதற்கு,
அருகதையுள்ளார்; சொல்லறிவீர்.
எவரே உரைப்பார் இவ்வருந்தீர்ப்பு?
இயேசுவின் திருமொழி என்றறிவீர்.
இவரே நடுவர், இனிமேல் நமக்கு;
இவர் வழி தூய்மை நன்கறிவீர்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
இயேசுவின் எழுத்து!
நற்செய்தி: யோவான் 8:7-8. 7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
நல்வழி:
தரையில் எழுதிய இயேசு தீர்ப்பு,
தவற்றைச் சுட்டிக் காட்டலையா?
உரைநூல் வடிவில் வராத சேர்ப்பு,
ஊரை உணர்த்தி ஓட்டலையா?
திரையில் தோன்றா ஊழியர் உண்டு;
தெய்வ வாக்கைப் பரப்பலையா?
விரைவில் வருகிற நடுவர் கண்டு,
விரும்பும் தூய்மை நிரப்பலையா?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
மௌனந்தானே நற்பதில்!
நற்செய்தி: யோவான் 8:6.
நல்வழி:
நம்மைக் குற்றப்படுத்தும் நோக்கில்,
நயவஞ்சகத்தைச் சொல்பவர்கள்,
தம்மைத் திருத்திக் கொள்வதற்கு,
தருவது எது நற்பதில்?
பொம்மை போன்று பேசாதிருத்தல்,
போதும் போதும் என்பவர்கள்,
மும்மை தெய்வச் செயலைக் காண்பர்;
மௌனந்தானே நல் மதில்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
ஒரு முதியவரின் ஆவல்!
பாட்டன் பாட்டி பேர்புகழ் உண்டு.
பூட்டன் பூட்டி நேர்மையும் உண்டு.
ஏட்டில் எழுதும் நாட்டமும் உண்டு.
கேட்டுப் பாடும் கூட்டமும் உண்டு.
கோட்டை போன்ற குடும்பம் அன்று;
வேட்டை ஆடுதே இடும்பில் இன்று.
வீட்டில் உரைத்தேன் கேட்பாரென்று.
ஓட்டைக் காது; அடைப்பது நன்று.
-கெர்சோம் செல்லையா.
இவள் இங்கே! அவன் எங்கே?
நற்செய்தி: யோவான் 8:1-5.
நல்வழி:
இருவர் செய்த குற்றம்,
என்று சொல்லும் சுற்றம்,
ஒருவரையே அடிப்பின்,
ஒழிக அதன் கொற்றம் .
பெருகும் அருள் திட்டம்,
பேசும் அன்பு வட்டம்,
தருபவரைப் பிடிப்பின்,
தவறுகள் தரை மட்டம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
இகழ்வாய்ப் பாராதீர்!
நற்செய்தி: யோவான் 7:52-53.
நல்வழி:
கல்வி, கேள்வி, பொருளியல் வாழ்வில்,
கரை சேராத கலிலியரை,
நல்லறிவாளர் வரிசையில் வையார்,
நன்கு கற்ற அந்நாட்டார்.
எல்லோருக்கும் அறிவைப் புகட்டும்,
இறையோ அன்று தம் மகனை,
இல்லா ஊரில் வளரச் செய்தார்;
இதைக் கற்பாரா இந்நாட்டார்?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நல்வழி:
குற்றம் சாட்டப்பட்டோர் சொல்லும்,
கூற்றின் உண்மை பாராமல்,
ஒற்றைச் சட்டம் கேட்டுக் கொல்லும்,
ஒழுங்கீனத்தைச் செய்யாதீர்.
கற்றக் கல்வி, திறமையுரைக்கும்,
காத்தல் யாத்தல் செய்யாமல்,
சுற்றுச் சூழல் அழிந்திறக்கும்,
சேதப் பணியும் செய்யாதீர்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.