நாலடி நற்செய்தி …6.
அன்பு!
தன்னலம் இல்லா நிலைதான் அன்பு;
தருகிற இறையிடம் கற்பாயா?
உன்னினம் கடந்து உதவும் பண்பு,
உண்மை அறமென நிற்பாயா?
-செல்லையா.
The Truth Will Make You Free
நாலடி நற்செய்தி …6.
அன்பு!
தன்னலம் இல்லா நிலைதான் அன்பு;
தருகிற இறையிடம் கற்பாயா?
உன்னினம் கடந்து உதவும் பண்பு,
உண்மை அறமென நிற்பாயா?
-செல்லையா.
மகனைப் பார்த்து தந்தையை அறிதல்!
நற்செய்தி: யோவான் 8:19.
19. அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
நல்வழி:
பிள்ளையின் வடிவில் பெற்றோர் காணும்,
பேதமை இல்லாக் கருத்தவராய்,
கள்ளமும் தவறும் செய்வார் கண்டு,
காணாத் தந்தையை, பழிக்கிறோம்.
உள்ளமும் நாவும் உரைத்திட நாணும்,
ஓவாச் செயலே செய்பவராய்,
வெள்ளை இயேசு மகனைக் கொண்டு,
விண் பாராது, முழிக்கிறோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நாலடி நற்செய்தி…5
இறைவழி!
திருவடி அடையும் பெருவழி கேட்டேன்.
தெரியா வழிகள் சொன்னார்கள்.
ஒரு வழி கண்டு, உட்புகுந்திட்டேன்.
இறைவழி அன்பு என்பார்கள்!
-செல்லையா.
நாலடி நற்செய்தி…4.
இறைவிருப்பு!
எதைச் செய்தாலும் இறை விருப்பா,
என்று பார்த்தல் நம் கடமை.
இதைச் செய்யாமல் ஒரு பொறுப்பா?
இழப்போம் நெஞ்சின் தனியுடமை!
-செல்லையா.
சான்று!
நற்செய்தி:யோவான் 8:17-18.
நல்வழி:
இருவர் சான்று ஒன்றாய் இருப்பின்
ஏற்றுக் கொண்டது திருச்சட்டம்.
ஒருவர் தந்தை, ஒருவர் மைந்தன்;
ஒன்றாய்த் தருவது இறைத்திட்டம்.
திருடர், பொய்யர், வாக்கை நம்பி,
தேய்ந்து போகுது ஒரு கூட்டம்.
பெருமை விட்டு, தாழ்மை பூண்ட,
பேரொளி அறிவே பரவட்டும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
இறையறிவு!
நாலடி நற்செய்தி…3.
இறையறிவு!
உம்மாலே நான், உமக்கென்றே நான்;
உணர்ந்து வாழ்வதே இறையறிவு.
இம் மா அறிவை இறையே தருவான்.
இறைவழி வாழ்வே நிறையறிவு!
-செல்லையா.
நாலடி நற்செய்தி…2.
அறிவு!
அன்பின் செயலே அறிவின் சிறப்பு.
அதை அடைய உழைப்போமே.
நன்மை செய்யா வாழ்வும் இறப்பு.
நம்பி, வாழ்ந்து, தழைப்போமே!
-செல்லையா.
இறையின் தீர்ப்பு!
நற்செய்தி: யோவான் 8:15-16.
நல்வழி:
ஆண்டிக்கும் தீர்ப்பு, அரசிற்கும் தீர்ப்பு,
ஆண்டவர் தீர்ப்பு ஒன்றேயாம்.
வேண்டிடும் நேர்மை, விரைவில் வருது.
விண்ணின் முடிவு நன்றேயாம்.
கூண்டில் அடைக்கும் முன்பே பார்த்து,
குற்றம் தவிர்ப்பது என்றேயாம்?
மாண்டபின் பேசிப் பயனேயில்லை.
மனிதா திருந்து, இன்றேயாம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
அறிய விரும்புவோம்!
நற்செய்தி: யோவான் 8:13-14.
13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
14. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.
நல்வழி:
அன்று அவர்கள் அறியவில்லை;
அறிந்து கொள்ள விரும்பவில்லை.
இன்று பலபேர் விரும்பவில்லை.
இதனால் அறிவும் புரியவில்லை.
ஒன்று மட்டும் தெரிந்திடுவோம்.
உண்மை அறிய விரும்பிடுவோம்.
சென்று இயேசுவை நோக்கிடுவோம்;
சிதைக்கும் மடமும் நீக்கிடுவோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
ஒளி!
நற்செய்தி: யோவான் 8:12.
12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
நல்வழி:
ஒருவரும் சேரக் கூடா ஒளியாய்,
ஒளிர்கிற தெய்வம் இயேசு.
திருவருள் தருகிற, தேடா வழியாய்,
தெரிகிற மனிதனும் இயேசு.
இருளாய் இருந்த எனது வாழ்வில்,
ஒளியாய் வருபவர் இயேசு.
பொருளால் அல்ல, தனது உயிரால்,
புனிதம் தருபவர் இயேசு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.