பெண்மையே வாழ்க!

"இன்று உலக பெண்கள்

தினமாமே ................

- #CartoonHasifkhan"
தாயை நினைத்துப் பார்ப்போம்;
தமக்கை, தங்கையும் சேர்ப்போம்.
வாய்த்த துணையுள் மகிழ்வோம்;
வாழ்க பெண்மை, புகழ்வோம்!
-கெர்சோம் செல்லையா.

கோணல் குறுக்கு வழிகளின் வெற்றி,
கோபுர உயர்வைக் கட்டிடுதே.
நாணயம் நேர்மை இல்லாதிருந்தும்,
நாணய காசாய்க் கொட்டிடுதே.
ஆணவச் செருக்கு அதனால் பெருக,
அவரது வாழ்வை வெட்டிடுதே.
மாணவராக மறைநூல் கற்போம்;
மாறுதல் நம்மைத் தட்டிடுதே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

பன்னிரு பேரைத் தெரிந்தெடுத்தவரே!

பன்னிரு பேரைத் தெரிந்தெடுத்தவரே!

நற்செய்தி மாலை: மாற்கு 3:13-15.
“அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.”
நற்செய்தி மலர்:
பன்னிரு பேரைத் தெரிந்தெடுத்தவரே,
பணியைக் கொடுத்து அனுப்பி வைத்தீரே.
சென்னிற வேர்வை சிந்தி அவரே,
செய்தியைக் கொடுத்து உமைப் புகழ்ந்தாரே.
என்னிரு கையிலும் பொறுப்பீந்தவரே,
எழுதி, பேசி உமைத் தொழுவேனே.
நன்னிலமாக நெஞ்சுகள் வரவே,
நற்செய்தியாலே  நான் உழுவேனே!
ஆமென்.

அருள் சுரக்கட்டும்!

அருள் சுரக்கட்டும்!

தோண்டத் தோண்டச் சுரப்பதுதான்,

தூய நீரின் அழகாகும்.
வேண்ட வேண்டக் கொடுப்பதுதான்,
விண் அரசின் புகழாகும்.
நீண்ட காலம் வேண்டுகிறேன்;
நிதமும் பாறையில் தோண்டுகிறேன்.
ஆண்ட, ஆளும் அரசர்களில்
அருள் சுரக்கவே, தூண்டுகிறேன்!
ஆமென்

தீய ஆவிக்கும் தெரியும்!

தீ​ய ஆவிக்கும் தெரியும்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:11-12.
“தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ‘ இறைமகன் நீரே ‘ என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.”
நற்செய்தி மலர்:
தீயஆவியரும், தெரிந்தே ஆடுகின்றார்;
திருமகன் இயேசுவின்முன், தோற்று அடங்குகின்றார்.
மாயும் மனிதர்தான், மயங்கிக் கிடக்கின்றார்;
மன்னனின் இரக்கத்தை, மறுத்துத் தடுக்கின்றார்.
நேய நெறி உரைத்தும், நின்று கேட்பவர் யார்?
நேர்வழி தெரிபவர் யார்? நிம்மதி பெறுபவர் யார்?
காயம் நிறைந்தவராய், கண்முன் வருகின்றார்,
கடவுளின் திருமகனார்; காண்பார் மீட்புறுவார்!
ஆமென்.

இயேசுவின் தொடுதல் எப்படி?

இயேசுவின் தொடுதல் எப்படி?
நற்செய்தி மாலை: மாற்கு 3:9-1௦.
“மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார். ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்.”
நற்செய்தி மலர்:
தீய வாழ்வால் நலம் கெட்டார்,
திரளாய்ப் பெருகி வந்திட்டார்.
தூயனேசுவை நெருங்கிட்டார்;
தொட்டுப் பார்க்க விரும்பிட்டார்.

ஆயன் இயேசு கண்டிட்டார்;
அன்பின் தொடுதலைக் காட்டிட்டார்.
பாய்மரப் படகில் அமர்ந்திட்டார்;
பலரது நெஞ்சைத் தொட்டிட்டார்!
ஆமென்.

வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்!

வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்!

நற்செய்தி மாலை: மாற்கு 3:7-8.
“இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.”

நற்செய்தி மலர்:
வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்;
விரும்பியேதாம் தம்மைத் தந்தார்.
ஏற்று மகிழும் இறையைக் கண்டார்;
இனிய வாழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

தோற்று போனோர் தீட்டு என்றார்.
தூய்மை அறியார் மாட்டுகின்றார்.
மாற்றுவதாக, வேட்டு வைத்தார்;
மாறா இறையோ மீட்டெடுத்தார்!
ஆமென்.

"வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்!

நற்செய்தி மாலை: மாற்கு 3:7-8.

"இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்."

நற்செய்தி மலர்:

வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்;

விரும்பி அவரும் தம்மைத் தந்தார்.

ஏற்று மகிழும் இறையைக் கண்டார்;

இனிய வாழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

தோற்று போனோர் தீட்டு என்றார்.

தூய்மை இறையோ காட்டு என்றார்.

மாற்றுவதாக, வேட்டு வைத்தார்;

மாறா இறையோ மீட்டெடுத்தார்!

ஆமென்."
Like · ·

எது சிறந்தது?

எது சிறந்தது?

உண்டு நிரப்பி, உரைகள் பரப்பி ,

ஊழியம் செய்தோம் என்பவரே,
தொண்டு புரிதலே இறைப்பணியாகும்;
தூய வாழ்வைத் தெரிவீரே.
கண்டுகொள்ள நீர் இயேசுவைப் பாரும்;
காலைக் கழுவி பணி செய்தார்.
முண்டு தூக்கி நீர் முழங்கால் காட்டும்
முன்பு இதனைப் புரிவீரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

இரங்கி வேண்டுவோம்!

இரங்கி வேண்டுவோம்!
இப்படி வாழக் கூடாதென்று,

இயேசுவின் பெயரில் உரைத்திட்டால்,
அப்படி வாழ்ந்து காட்டும் எவரும்
அறிவில்லார் எனத் திட்டுகிறார்!
எப்படி இவரும் மீட்பைப் பெறுவார்,
என்றே இரங்கி வேண்டிட்டால்,
முப்படி அளக்கும் மும்மை இறையால்,
முட்டாள்தனத்தை விட்டிடுவார்!
ஆமென்.

இயேசுவை இவர்கள் புரியலையே!

அவர்கள் இயேசுவை அறியலையே!
நற்செய்தி மாலை: மாற்கு 3:6
“உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.
நற்செய்தி மலர்:
நன்மை செய்யும் இடங்களிலே,
நன்றி உள்ளோர் தெரியலையே.
இன்ப வாழ்வை ஈகையிலே,
இயேசுவை எவரும் புரியலையே.
என்ன உரைத்தும் பலனிலையே.
இடம் வலம் வேறென அறிவிலையே.
சொன்ன வாக்கு பலிக்கயிலே,
சூழும் வெட்கம், இவர் மேலே!
ஆமென்.