அன்று மரியாள் கண்டுரைத்தும்….

அன்று மரியாள் கண்டுரைத்தும்….
நற்செய்தி மாலை: மாற்கு 16:9-11.
“வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.”
நற்செய்தி மலர்:
அன்று மரியாள் கண்டுரைக்க,
அடியாரோ அதை நம்பவில்லை.
இன்று நாங்கள் நம்பியுரைக்க,
எதிரி தருவதோ அம்பு வில்லை!
சென்று போன நாட்களின் தவற்றைச்
சீர்செய்தாலோ வம்பு இல்லை.
என்று ஒருவர் நம்பவிலையோ,
அங்கு மெய்யும் அன்புமில்லை!
ஆமென்.

No automatic alt text available.

உயிர்த்தெழுந்தார், உயிர்த்தெழுவோம்!

உயிர்த்தெழுந்தார், உயிர்த்தெழுவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 16:5-8.
“பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம், ‘ திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘ உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் ‘ எனச் சொல்லுங்கள் ‘ என்றார். அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
பிறந்தவர் எவரும் இறந்திடுவார்;
பிறவி முடிந்ததும் பறந்திடுவார்.
இறந்தவர் பின்னர் என்னாவார்?
இதற்கு விடையை யார் சொல்வார்?
திறந்து பார்ப்போம் இறைநூலை;
தெய்வ மைந்தன் உயிர்த்தெழுந்தார்.
உறக்கம் போன்றதே நம் இறப்பும்.
ஒருநாள் நமையும் எழுப்பிடுவார்!
ஆமென்.

No automatic alt text available.

தொப்பையும் குப்பையும்!

உடம்பின் அழகை தொப்பை குறைக்கும்.

ஊரின் அழகை குப்பை மறைக்கும்!

தொப்பையும் குறைப்போம்!

குப்பையும் மறைப்போம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 9 people, people standing and crowd

யார் புரட்டுவார் இந்தக் கல்லை?

யார் புரட்டுவார் இந்தக் கல்லை?
நற்செய்தி மாலை: மாற்கு 16:1-4.
” ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர். வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள். ‘ கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்? ‘ என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல்.”
நற்செய்தி மலர்:
இந்தக் கல்லை எடுத்துப்போட,
யார்தான் நமக்கு உதவிடுவார்?
எந்த நாட்டு ஏழை என்றாலும்,
இப்படித்தானே கதறுகிறார்.
அந்தக் கவலை இனிமேல் வேண்டாம்;
அடைத்தக் கல்லோ ஆங்கில்லை;
மைந்தனேசு உயிரோடெழுந்தார்;
மனிதா, உனக்கினி தீங்கில்லை!
ஆமென்.

No automatic alt text available.

கல்லறை ஓன்று புதிதாய் இருக்கும்….

கல்லறை ஓன்று புதிதாய் இருக்கும்….
நற்செய்தி மாலை: மாற்கு 15:46-47.
“யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.”
நற்செய்தி மலர்:
சில்லறை எதுவும் சேர்க்கா இயேசு,
சேரும் இடத்தைப் பாருங்களே.
கல்லறை ஒன்று புதிதாய் இருக்கும்
காட்சியும் காண, வாருங்களே.
நல்லவர் இறப்பும் நன்கு முடியும்;
நன்றியில் நினைவு கூருங்களே.
எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும்,
இறைவனின் அரசில் சேருங்களே!
ஆமென்.

Image may contain: outdoor and nature

எந்த சமயமோ…..

Image may contain: 21 people, crowd and outdoor

இறைவனின் பிள்ளை எங்குண்டு?

அந்தணர், வீரர், வணிகர், சூத்திரர்;
அப்படிப் பிரித்தவர் சிலருண்டு.
வந்தவர் உயர்ந்தவர், என்றிவர் தாழ்ந்து,
வாழ்வை இழந்தவர் பலருண்டு.
இந்தியர், ஆரியர், திராவிடர், தமிழர்
என்று பிரிப்பவர் இங்குண்டு.
எந்த சமயமோ, இனமோ, மொழியோ,
இறைவனின் பிள்ளை எங்குண்டு?

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 21 people, crowd and outdoor

உவப்பில் வியப்போர்!

உவப்பில் வியப்போர்!
நற்செய்தி மாலை: மாற்கு 15:44-45.
“ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, ‘ அவன் இதற்குள் இறந்து விட்டானா? ‘ என்று கேட்டான். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.”
நற்செய்தி மலர்:
இறப்பின் செய்தி கேட்டு வருந்தி,
இரக்கம் கொள்வோர் வாழுகிறார்.
உறக்கம்கொண்டு மயங்குதல்போன்று,
உவப்பில் வியப்போர் தாழுகிறார்.
பிறக்கும் விளைவு எப்படியென்று,
புரியாதிவரும் ஆளுகிறார்.
திறக்கும் வாசல் தீமையை வீழ்த்த,
திடீரென்று மாளுகிறார்!
ஆமென்.

Image may contain: 1 person

அரிமத்தியாரின் துணிவு!

அரிமத்தியாரின் துணிவு!
நற்செய்தி மாலை: மாற்கு 15:42-43.
“இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.”
நற்செய்தி மலர்:
அஞ்சி நடுங்கிய அடியார் ஒளிய,
அரிமத்தியாரோ துணிந்து சென்றார்.
கெஞ்சிக் கேட்பவராக அல்ல,
கிறித்துவின் உடலை உரிமை என்றார்.
மிஞ்சிப்போன பிலாத்துவும்கூட,
மேல் பேசாது வியந்து நின்றார்.
வஞ்சம் எதிர்க்கத் துணிவு வேண்டும்;
வாய்மையில் வாங்கினோர் வென்றார்!
ஆமென்.

Image may contain: text

ஒடுக்கப்பட்ட பெண்கள் எனினும்!



​ஒடுக்கப்பட்ட பெண்கள் எனினும்!

நற்செய்தி மாலை: மாற்கு 15:40-41.
பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர். இயேசு கலிலேயாவில் இருந்த போது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் அங்கே இருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
கடுக்கன் ஒன்றைக் காதில்போட்டு,
கரை திரை அலையும் காளையரே,
அடுக்கடுக்காகத் துன்பம் கண்டு 
அஞ்சி ஓடினால் கோழையரே.
இடுக்கண் வந்தால், தேவை துணிவு;
எங்கு உண்டிவ் வேளையிலே?
ஒடுக்கப்பட்ட பெண்கள் எனினும்,
உணர்வைக் காண்பீர் எழையிலே!
ஆமென்.

இழிஞன் வினையால் இறந்தீரே!

இழிஞன் வினையால் இறந்தீரே!
நற்செய்தி மாலை: மாற்கு 15:37-39.
” இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார். அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ‘ இம்மனிதர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
பொன்னிலும் மேலாம் நன்னருள் மீட்பை,
புவியோர் பெறவே பிறந்தீரே.
என்னுயிர் மீட்க, இன்னுயிர் கொடுத்தீர்;
இழிஞன் வினையால் இறந்தீரே.
சென்னிறக் குருதி என்னையும் கழுவ,
சிலுவையில் யாவையும் மறந்தீரே.
இன்னிலத்தோர்கள் அன்பினில் வாழ,
இறைவழி திறந்துச் சிறந்தீரே!
ஆமென்.

Image may contain: one or more people and outdoor