கல்தோன்றி, மண்ணைக் காணாக்
காலத்துச் செய்தி வந்தால்,
இல்லென்று இழுத்து மூட,
இங்கேதான் அரசு உண்டே.
சொல் என்று சொல்பவர்கள்
சொற்களில் உண்மை காணேன்.
வெல்பவர் இதனால் வீழ்ந்தார்;
விதியாக்கி விட்டார் பண்டே!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
கல்தோன்றி, மண்ணைக் காணாக்
காலத்துச் செய்தி வந்தால்,
இல்லென்று இழுத்து மூட,
இங்கேதான் அரசு உண்டே.
சொல் என்று சொல்பவர்கள்
சொற்களில் உண்மை காணேன்.
வெல்பவர் இதனால் வீழ்ந்தார்;
விதியாக்கி விட்டார் பண்டே!
-கெர்சோம் செல்லையா.
அடிமையின் தாழ்வில்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:46-48.
46 அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
அடிமையாய்க் கிடப்போரையும்
அன்புடன் பார்ப்பவர் யார்?
கடினமாய் நடத்துவோரும்
கனிந்திடச் சேர்ப்பவர் யார்?
முடிவிலா நன்மை ஈந்து
முற்றிலுமாய் மீட்பவர் யார்?
பிடிபடா என்னைப் பிடித்த
பேரரசர் இறைமகனார்!
ஆமென்.

பற்றுறுதி கொள்வது பேறு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:39-45.
39 அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
40 சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41 எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
42 உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.
44 இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
45 விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
கிறித்துவில் வாழ்வு:
பற்றுறுதி கொண்டவர்கள்
பெற்றிடுவார் பேறு.
மற்றவரோ வீழ்ந்திடுவார்,
கற்றறிந்து கூறு!
சுற்றியுள்ள தீவினைகள்
அற்றுவிழ நாடு.
கொற்றவரின் குடைநிழலில்
வெற்றியுண்டு, பாடு!
ஆமென்.

உமது வாக்கின்படியே ஆகட்டும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:38.
38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
கிறித்துவில் வாழ்வு:
நிந்தை அவச்சொல் நெடுங்கதையாய் வரும்;
நிம்மதி குலைக்கும் உறவுகளே தரும்.
இந்த நிலையைப் புரிந்த எவரும்,
ஏற்பாரோவென நீவிரே கூறும்.
தந்தை இறையின் வாக்கே போதும்;
தவறு வராது அதில் எப்போதும்.
எந்தத் துன்பம் எவர் தந்தாலும்,
இறையின் விருப்பே நன்மையாகும்!
ஆமென்.


கூடும், இறையால் கூடும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:36-37.
36 இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
37 தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
தேடும் கடவுளைத் தேடும்;
தெளிவு பெறவே தேடும்.
கூடும், யாவும் கூடும்;
கிறித்து அருளால் கூடும்.
ஓடும், பகைமை ஓடும்;
உண்மை வெல்ல, ஓடும்.
நாடும், வலுவை நாடும்;
நாடும் வாழ, நாடும்!
ஆமென்.

கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:34-35.
34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
கிறித்துவில் வாழ்வு:
எப்படியாகும் என்றே கேட்கும்,
எனது அருமை நண்பர்களே,
இப்படிச் செய்ய இறையால் கூடும்
ஐயம் தவிர்த்து எண்ணுங்களே.
அப்படி மைந்தன் பிறந்ததினால்தான்,
ஆண்டவர் என்கிறோம் அன்பர்களே;
ஒப்புமையில்லா இப்பெரும் செயலால்,
உமக்கும் மீட்பு, நம்புங்களே!
ஆமென்.

இயேசு பிறக்க, இன்பம் அள்வீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:31-33.
31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
அன்றொரு தூதன் உரைத்தது கண்டீர்;
அதன்படியானதும் அறிந்து கொண்டீர்.
என்றபோதிலும் இறைவழி மறந்தீர்;
ஏற்க மறுத்து, எங்கோ பறந்தீர்.
கன்னி மரியின் பற்றை நினைப்பீர்;
காற்பங்காவது பற்றி அணைப்பீர்.
இன்றைக்காவது ஏற்றுக் கொள்வீர்;
இயேசு பிறக்க, இன்பம் அள்வீர்!
ஆமென்.

மரியின் அச்சம்!
கிறித்துவின் வாக்கு:லூக்கா1:30.
30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
கிறித்துவில் வாழ்வு:
கன்னி ஒருத்தி கருவுற்றாள் எனில்,
காண்போர் பழிக்கும் காலமது.
அன்னை மரியும் அதனை நினைத்து,
அச்சம் கொள்வதில் தவறேது?
என்றபோதிலும் இறைவிருப்பிற்கு,
ஈந்தளித்தல் காணும்போது,
முன்பு நிற்கத் தகுதியில்லை;
என்றுணர்ந்தேன், உண்மையேயிது!
ஆமென்.

விடுதலை நாள் வாழ்த்து!
அரசியல், சமுக வீழ்ச்சிகளால்,
அடிமை ஆனோம் அன்னாளில்.
இரக்கம் இல்லா ஆட்சிகளால்,
ஏற்றமும் காணோம் இன்னாளில்.
முரடர், திருடர் நீக்கிவைத்தால்,
முன்னேறிடுவோம் பின்னாளில்.
உரக்கக் கூறியும் போக்குரைத்தால்,
உமக்கு விடுதலை என்னாளில்?
-கெர்சோம் செல்லையா.

நல்லவரேசு எனது கோனார்!
உண்மையுள்ள நண்பன் வேண்டும்,
உயிராயிருந்து ஒளியைத் தூண்டும்.
எண்ணி நானும் தேடிச் சென்றேன்;
எவருமில்லை, வாடி நின்றேன்.
கண்ணில் பாயும் ஆறு கண்டார்;
கடவுள் இரங்கி, ஆட்கொண்டார்.
நண்பனாகி இலக்கணம் ஆனார்;
நல்லவரேசு எனது கோனார்!
-கெர்சோம் செல்லையா.
