மனித நேயம் கொன்றோம்!
தூய நீரும் காற்றுந்தானே,
தூத்துக்குடியார் கேட்டார்.
நேயமற்ற பாவியரோ,
நெஞ்சிலும் வாயிலும் சுட்டார்.
ஆயரைத்தான் அரசன் என்று,
அந்த நாளில் கொண்டோம்.
மாயமாகும் மண்ணாட்சியில்,
மனித நேயம் கொன்றோம்!
-கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
மனித நேயம் கொன்றோம்!
தூய நீரும் காற்றுந்தானே,
தூத்துக்குடியார் கேட்டார்.
நேயமற்ற பாவியரோ,
நெஞ்சிலும் வாயிலும் சுட்டார்.
ஆயரைத்தான் அரசன் என்று,
அந்த நாளில் கொண்டோம்.
மாயமாகும் மண்ணாட்சியில்,
மனித நேயம் கொன்றோம்!
-கெர்சோம் செல்லையா.

பெயரைப் பார்ப்போம்!
இறைவாக்கு: லூக்கா 2 :21
21 பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
இறைவாழ்வு:
பெயரில் என்னப் பெருமை என்று
பேசும் மக்கள் சிலருண்டு.
துயரில் இதனால் மீட்பை இழந்து
துடித்துப் போவோர் பலருண்டு.
உயரம் தாண்ட அறியார் இவர்க்கு,
உண்மை என்னப் புரியவில்லை.
முயலும் முன்னே அறியும் இறையின்
பெயரே மீட்பு, வேறில்லை!
ஆமென்.

காது இருப்பின், கேட்போம்!
சூது எண்ணம் நிறைந்தோரைத்தான்,
சிறந்த அறிஞர் எனக் கண்டோம்.
தீது இதனால் வருவதை மறந்து,
திருடரைத் தலைவர் எனக் கொண்டோம்!
ஏது வேறு எங்கும் இல்லை;
எண்ணும் நெஞ்சைக் கழுவிடுவோம்.
காது கேட்க மறுப்போமென்றால்,
கடவுளின் தீர்ப்பில் அழுதிடுவோம்!
-கெர்சோம் செல்லையா.

ஆசு அகற்றுவோம்!
மாசு குப்பை சேர்த்து வைக்கும்,
மக்கள் திரள்தான் மாநகரா?
ஆசு போக்க அறிவற்றவர்தான்,
அருமைப் பட்டண மானிடரா?
காசு சேர்க்கும் எண்ணம் நன்று;
கறையற்றவராய்ச் சேர்ப்பவர் யார்?
பேசு வாயால் தூசகலாது!
மாசகற்றும் வழியைப் பார்!
-கெர்சோம் செல்லையா.

நிறுவனங்களின் கைகளில் அரசிருந்தால்…
மாழை எடுக்க மலையைப் பெயர்க்கும்
மாவலி கொண்ட எம்மரசே,
ஏழை இந்தியர் வறுமை போக்க,
ஏன் உனக்கு இயலலையே?
கீழை நாட்டின் ஆட்சிகள் யாவும்,
கெடுக்கும் நிறுவனக் கைகளிலே!
கோழையான தலைவர்கள் இதனால்
எழைக்கிரங்க இயலலையே!
கெர்சோம் செல்லையா.

வீணாக்காமல் உதவுவோம்!
பட்டினி என்றால் என்னவென்று,
பாட்டினில் சொன்னால், நாம் பாடோம்.
கட்டிட வேறு உடையற்றவரைக்…

மைசூர் மழையில் காத்த இயேசு!
இரவின் மழையில் இறங்கிய துன்பும்,
மரங்கள் திணறி முறிந்ததன் பின்பும்,
உறுதியில் நாங்கள் நிற்பது எதனால்?
இறைமகன் இயேசு
இருக்கிறார் அதனால்!
-கெர்சோம் செல்லையா.
மைசூர் மழையில் காத்த இயேசு!
இரவின் மழையில் இறங்கிய துன்பும்,
மரங்கள் திணறி முறிந்ததன் பின்பும்,
உறுதியில் நாங்கள் நிற்பது எதனால்?
இறைமகன் இயேசு
இருக்கிறார் அதனால்!
-கெர்சோம் செல்லையா.


ஆல் விழுந்த காட்சி கண்டு,
அஞ்சி நின்ற மக்களிடம்,
நூல் இழையில் காத்திடும் நம்
நுண்மதியான் அருளுரைப்பேன்.
வால் இழந்த நாயினுக்கும்,
வாய் இனிக்க உணவளிக்கும்,
மால் இறைவன் வாக்கினுக்கு,
மடியாமல் பொருளுரைப்பேன்.
-கெர்சோம் செல்லையா.

யார் மூத்தவர்?
பேரரே பாட்டர்க்கு மூத்தவரென்று,
பெருமையில் பேசும் ஆரியரே,
சேரரும் சோழரும் தோன்றிடு முன்பு,
சென்றவர் பாண்டிச் சீரியரே!
நீரதைத் தோண்டி நிலத்தைப் பிளப்பின்,
நேர்மை எதுவெனத் தெரிவீரே.
யாரெமை ஆண்டால் எமக்கொன்றுமில்லை
என்கிற தமிழரைப் புரிவீரே!
-கெர்சோம் செல்லையா.
வெள்ளை நிறத்தில்
கல்லறைகள்!
எள்ளை நட்டு
எண்ணையெடுப்பார்
இந்திய நாட்டில்
குறைந்திட்டார்.
கள்ள வழியில்
கலப்படம் செய்து
காசு சேர்ப்போர்
நிறைந்திட்டார்.
கொள்ளையிடுதல்
தவறு என்று
கூறி வாழ்வோர்
குறைந்திட்டார்.
வெள்ளை நிறத்துக்
கல்லறையினையும்
வீடு என்பார்
நிறைந்திட்டார்.
-கெர்சோம் செல்லையா.
