பிறந்த செய்தி முதலில் கேட்டார்,
பிறரால் ஒடுக்கப் பட்டவரே.
திறந்த வெளியில் மந்தை காக்கும்,
உறைந்த மடமை உள்ளில் கொண்டார்,
உண்மையின்றித் தீட்டென்பார்.
நிறைந்த அறிவால் நமை நடத்தும்,
நேரிறையோ நற் கூட்டென்பார்!
(லூக்கா 2: 8-12).

The Truth Will Make You Free
நம்மை விடவும் நான்கு கற்றார்,
நன்றாய் ஆய்ந்து அறியினும்,
தம்மை மீட்பார் தன்மை அறியார்;
தவறி அரண்மனை போகிறார்.
செம்மை அறிவு பிறகு பெற்றார்
செல்ல வாக்கு உரைப்பரும்,
பொம்மை போல போகாதிருந்தார்;
புறக்கணிப்பால் நோகிறார்!
(மத்தேயு 2)
ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்?
என்கிற கேள்விக்குப் பதிலென்ன?
வான் நிறைவை யார்தான் விடுவார்?
வையம் இறங்கும் ஏதென்ன?
நான் என்கிறத் தீமை கொள்ளும்,
நாட்டவர் மீள வழியென்ன?
தான் இறங்கித் தாழ்மை சொன்னார்;
தவறா இறை மொழியென்ன?
(யோவான் 3:16}.
இப்படி இவர்கள் எழுதிய நூற்கள்,
இசரயெல் என்று இருந்தாலும்,
ஒப்பிட இயலா இறையின் திட்டம்,
உலகம் முழுதும் மீட்பதுதான்.
அப்படி மீட்க வருபவர் குறித்து,
அறிவிக்கும் முன் வாக்குகளில்,
தப்பிதமென்று ஒன்றும் இல்லை;
தரணி மீளக் கேட்பதுதான்!
www.thetruthintamil.com