திருச்சட்டம்!

திருச்சட்டம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:20-21.

20  விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.

21  அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

அத்து மீறும் மனிதரைத் தடுக்கும்,

ஆண்டவர் வழியே திருச்சட்டம்.

பத்து கட்டளை என்று சுருக்கும் ,

பழைய ஏற்பின் அருட்திட்டம்.

மொத்த கருத்தும்  உள்ளடக்கும்,

முடிவு கேட்டது திருக்கூட்டம்.

இத்தரையில் இயேசு காட்டும்,

இனிய அன்பால் விண் எட்டும்!

ஆமென்.

வங்கியும் வறியரும்!

வங்கியும், வறியரும்!


வங்கியும், வறியரும்!
தாழ்ந்து தளர்ந்து அயருகையில்,
தம் நிலை உயர வேண்டிடுவோர்,
வாழ்ந்து வளர்ந்து உயருகையில்,
வறியரை நோக்க மறுப்பது ஏன்?
ஆழ்ந்து கற்றவர் தருஞ் சட்டம்,
அனைவரும் ஒன்றெனக் கருதாமல்,
வீழ்ந்து கிடக்கும் எளியவரை,
விரட்டும் படியாய் இருப்பது ஏன்?
-கெர்சோம் செல்லையா.


ஒடிசாவின் நுவாபாரா மாவட்டம், பாராகான் கிராமத்தில் உத்கல் கிராம வங்கி உள்ளது. இங்கு ஜன்தன் வங்கிக் கணக்கில் பெண்களுக்கு மத்திய அரசால் செலுத்தப்பட்டுள்ள ரூ.1,500-ஐ பெறுவதற்காக, புஞ்சிமதி தேய் என்ற 60 வயது பெண் கடந்த 9-ம் தேதி சென்றுள்ளார். 100 வயதான தனது தாய் லாபே பாகல் படுத்த படுக்கையாக இருப்பதால் அவரது கணக்கில் செலுத்தப்பட்டுள்ள ரூ.1,500-ஐ தன்னிடம் தர வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் லாபே பாகல் நேரில் வந்தால்தான் பணம் தரமுடியும் என வங்கி மேலாளர் கண்டிப்புடன் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, மறுநாள், படுத்த படுக்கையாக இருந்த 100 வயது தாயை வங்கிக்கு புஞ்சிமதி தேய் கட்டிலுடன் தெருக்களில் இழுத்துச் சென்றார்.
(தமிழ் இந்து)

வங்கியும் வறியரும்!

வங்கிப் பணியாளரும் வறியவரும்!

தாழ்ந்து தளர்ந்து அயருகையில்,
தம் நிலை உயர வேண்டிடுவோர்,
வாழ்ந்து வளர்ந்து உயருகையில்,
வறியரை நோக்க மறுப்பது ஏன்?
ஆழ்ந்து சென்றிடும் நம் சட்டம்,
அனைவருக்காகவும் இருக்காமல்,
வீழ்ந்து கிடக்கும் எளியவரை,
விரட்டும் படியாய் இருப்பது ஏன்?

-கெர்சோம் செல்லையா.

பணிவுண்டோ?

பிறர் நம்மைப் புகழும்போது!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18: 18-19.

18  அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

19  அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.

கிறித்துவில் வாழ்வு:

நன்மையின் உருவாய் வந்திருந்தும்,

நல்லதை மட்டுமே தந்திருந்தும்,

அன்பினால் இயேசுவைப் போற்றுகையில்,

அவரோ தடுக்கிறார் துணிந்து!

என்னென்ன தீமை செய்திருந்தோம்,

எங்கெல்லாமோ ஏய்த்திருந்தோம்;

பண்பிலார் நம்மைப் புகழுகையில்,

பார்த்தோமா உள் குனிந்து?

ஆமென்.

விலையில்லை!

விலையின்றிக் கொடுப்போம்!


நெல்லும் மணியும் நிறைந்த வயலை,


நெடு வழியாக்கத் துடிக்கும் நாம்.

வெல்லும் வாழ்க்கை ஏழையுமடைய,

விலையிலாக் கல்வி கொடுப்போமா? 

கொல்லும் கொடிய குண்டினை வாங்கக்
கோடிகோடி கொடுக்கும் நாம்.

செல்லும் ஏழைகள் நீடூழி வாழச்

செலவிலா மருத்துவம் கொடுப்போமா?


-கெர்சோம் செல்லையா.

மழலையர் !

மழலையரைப் பார்த்து!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:15-17.15  பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.16  இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.17  எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
தந்தை தாயைப் பார்த்துப் பயின்றும்,

தவறுகள் என்னில் இருப்பதனால்,

மைந்தனேசு மாற்றிச் சொன்னார்;

மழலையர் பண்பைப் பார் என்று.

இந்த அறிவும் இவர்கள் அன்பும்,

இன்று என்னில் இராததனால்,

சொந்த வாழ்வில் குறைவுபட்டேன்;

சொற்படித் திருத்துவீர் இன்று!

ஆமென். 

தாழ்த்துவோம், வாழ்த்துவார்!

தாழ்த்துவோம், வாழ்த்துவார்!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:13-14.

13  ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

14  அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

ஆயம் வாங்கும் அலுவலர் ஒருவர்,

ஆண்டவர் கோயில் முன் நின்று,

மாயம் நிறைந்த மனதை உணர்ந்து,

மன்னிப்பிற்குத் தாழ்த்துகிறார்.

சாயம்பூசிச் சாவினை மறைத்து, 

சரிதான் என்கிற நாம் இன்று,

காயம் ஏற்று கனியும் அவர்முன்,

கசியும்போது வாழ்த்துகிறார்!

ஆமென்.

பெருமை!

திமிராய்ப் பார்க்கிறவர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:9-12.

9   அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

10  இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

11  பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

12  வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

கிறித்துவில் வாழ்வு:

ஒரு முறை காசு கொடுத்து விட்டு,

ஊர் நிறை செல்வம் வேண்டுகிறார்.

இரு முறை நோன்பு எடுத்து விட்டு,

இதுவே வழியெனத் தோண்டுகிறார்.

தெரு வரைத் தம்மைப் புகழ்ந்துவிட்டு,

திமிராய்ப் பிறரை எள்ளுகிறார்.

திரு மறை கூறும் அன்பு விட்டு,

தேடின், தெய்வம் தள்ளுகிறார்!

ஆமென்.

நீடிய பொறுமை!

நீடிய பொறுமை வேண்டும்!கிறித்துவின் வாக்கு லூக்கா 18:6-8.
6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

இலைமறை காயாய் ஒளிப்பதனால்,

இல்லை நேர்மை என்பீரா?

விலையாய்த் தீர்ப்பு அளிப்பதனால்,

வெறுத்து, தீமை தின்பீரா?

அலைபோல் ஆடும் உள்ளத்தை

அடங்கி இருக்கச் சொல்வீரா?

நிலை கண்டிறையும் இறங்கிடுவார்;

நீடிய பொறுமை கொள்வீரா?

ஆமென்.

நேர்மையற்றோர் முன்பு!

நேர்மையற்றோர் நடுவில்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:3-5.

3   அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.

4   வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,

5   இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

நேர்மையற்ற நடுவரும்,

நெறிமுறைதான் பேசுவார்.

கூர்மையற்ற அறிவினால்,

கொடுமையைத்தான் பூசுவார்.

யார் கொடுப்பார் தீர்ப்பு,

என்று ஏழை ஏங்குவார்.

பார் அறியும் இறைவனோ,

பரிவினில் தாங்குவார்!

ஆமென்.