மொத்தப் பொருளும் தமக்கெனக் கண்டு,
பத்தில் ஒன்றை இறைமுன் கொண்டு,
படைக்கக் கேட்டது முதலுரை.
அத்துடன் நிறுத்தும் திருந்தார் கண்டு,
அவரை அழைக்க நல்லிடம்,
சத்துணவளிக்கும் காடெனக் கொண்டு,
சரிபாதி கேட்குது நடுவுரை!
(லூக்கா 3:1-18)

The Truth Will Make You Free
அறிஞர் திரும்பி வராதது கண்டு,
அரசன் வெறியில் துடிக்கிறான்.
சிறுவர் பலரில் ஐயம் கொண்டு,
சினத்தில் கொன்று முடிக்கிறான்.
வறிஞர் என்பார் அறிவிலும் உண்டு;
வாழ நினைப்போன் படிக்கிறான்.
புரிவாய் நண்பா, புனிதத் தொண்டு;
புரியா ஏரொது வெடிக்கிறான்!
(மத்தேயு 2).
விட்டிடு கொடுமை!
ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்;
ஒளித்திருந்து வெறியர் கொன்றார்.
யாரைக் காக்க இவரைக் கொன்றார்?
இல்லை நற்பதில், தராது சென்றார்.
போரைத் தவிர்ப்பீர், பேசிட வாரீர்.
புரிதல் பெற்று, இணையப் பாரீர்.
நீரை வடிக்கும் குடும்பமும் பாரீர்.
நினைந்து, திருந்தி, வாழ, வாரீர்!
-கெர்சோம் செல்லையா.