3. அழிவு! நல்லது என்று நானிலம் படைத்த நல்லிறை வருத்தி வாழாதீர். சொல்வது கேட்டு நடப்பது நன்மை; சொரியும் மழையில் வீழாதீர். எல்லையில்லாத இறையின் அன்பை, ஏளனம் செய்து அலையாதீர். தொல்லை தருவர் துயரே பெறுவர்; தெய்வம் இலாது தொலையாதீர்! (தொடக்க நூல் 6:1-7).
எங்கும் தீது சூழ்ந்திருந்தாலும், யாவரும் அடிமையாயில்லை. அங்கும் இங்கும் சிலரிருப்பார்; அவரும் கெடுப்பவராயில்லை. தங்கள் நிலையை அவருணர்வார்; தம்மைத் தாழ்த்தி வேண்டுவார். இங்கே இறையும் இறங்கி வருவார்; இனிதாய் வாழத் தூண்டுவார்! (தொடக்க நூல் 4:25-26)
தீதை அடக்கும் வழிமுறை உண்டோ? தெய்வத்திடம் நாம் கேட்போமே. பாதை தெரியார் காண்பது என்றோ? பார்த்து அவரையும் மீட்போமே. நீதி நன்மையே உயர்வு கொடுக்கும்; நாமும் செய்து வாழ்வோமே. வாதை என்று வாயிலில் கிடக்கும், வலிய தீதை ஆள்வோமே! (தொடக்க நூல் 4:7)
தீதின் வளர்ச்சி! 4. தீதின் வளர்ச்சி! சிறு விதையாகத் தொடங்கிய தீது, சிகரம் தேடும் மரமாய் வளர்ந்து, பெரு நிலம் முழுதும் படர்ந்து பரந்து, பிள்ளைக்கனியை நஞ்சாய்த் தருதே. குறுமதிகொண்ட நெஞ்சின் சூது, கொடுமைகளுக்கு ஊற்றாய் இருந்து, தெரு முனை நாடு நகரம் இணைத்து, தெளிவு அழிக்கும் ஆறாய் வருதே! (தொடக்க நூல் 4).
அம்மண அவலம் அழகு என்று, அவிழ்த்து போடுகிறார் இன்று. தம்முளம் குத்திக் காட்ட அன்று, தவறை மூடியவர் உண்டு. செம்மனமாக நம் மனம் திகழ, செய்தார் இறைவன் ஒரு பலி. நம்பினார் வாழ்ந்து நன்கு மகிழ, நமக்கு அருளிய அவர் வழி! (தொடக்க நூல் 3)
தீதின் தன்மை எப்படி கெடுக்கும்? தெய்வம் விட்டுப் பிரிக்கும். தூதின் வலிமை போர் தொடுக்கும்; தீய நெஞ்சையும் பிரிக்கும். கோதின் கூட்டு என்று விளிக்கும், கொடுமை பிறரையும் பிரிக்கும். சூதின் வாழ்வு தொடர்ந்து அழிக்கும்; சுற்று முற்றும் பிரிக்கும்! (தொடக்க நூல் 3)
இறை கீழடியில் இருக்கும் மனிதன் இறையாய் உயரப் பாய்ந்திடில், கறை மாறாத களங்கம் அடைந்து, கடவுளை விட்டு விழுவானே. முறை தவறாக முயலும் ஒருவன், முதலில் தன்னை ஆய்ந்திடில், குறை காணாது, திருத்தியமைக்கும், கோனினருளால் எழுவானே! (தொடக்க நூல் 3:1-24).
கொடுத்தவர் வாக்கை நம்பாமல், கொடியோன் பொய்யை ஏற்கிறார். அடுக்கடுக்காய் பல தவறிழைத்து, அடிமையாய்த்தமை விற்கிறார். கெடுப்பவர் யார் என அறியாமல், கீழ்ப்படியாதராய் நிற்கிறார். தடுப்பவர் ஒருவர் இருக்கிறார்; தலைவனை நம்பார் தோற்கிறார்! (தொடக்க நூல் 3:1-24).
3. பரிவு கொள்ளும் இறைவன்! 3. பரிவு கொள்ளும் இறைவன்! ஆணும் பெண்ணும் படைக்கப்பட்ட அந்த நாளின் நிகழ்வுகள், காணும் பேறு அடையாததால், கதையே என்று சொல்லுவர். பூணும் நல்ல அறிவுப் பூக்கள் பொதிந்த நற்கருத்துகள், நாணும் நம்மைச் சீர்ப்படுத்தும். நம்புவோரே வெல்லுவர்! (தொடக்க நூல் 3:1-6)
தனிமை கொண்ட மனிதன் கண்டு, தகும் துணை இறை தேடினார். இனிமை தரும் இணையாள் ஈந்து, இவரில் இல்லறம் நாடினார். புனிதம் ஆளும் உறவின் வாழ்வு புரியவே இருவரும் கூடினார். மனிதர் அறிய ஒருவனுக்கொருத்தி, மறை மொழியையே பாடினார்! (தொடக்க நூல் 2:18-25)