ஒருவனுக்கொருத்தி, ஒருத்திக்கொருவன்,
உண்மை இறையின் வாக்காகும்.
பருவம் வருமுன் பாலியல் இச்சையில்,
அருவருப்பாக ஆயிரம் வைப்பது
அரசர்கள் செய்கிற தவறாகும்.
புரிய மறுத்த சாலமொன் வீழ்ச்சியில்,
புனிதம் கற்பார் எவராகும்?
(1 அரசர்கள் 11)

The Truth Will Make You Free
ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நூலை,
உணர்ந்தவர் தந்தார் உள்ளில் கேட்டு.
செவ்விளக்குருதி துடித்தெழும் நாளில்,
சிந்தையில் வடித்தார் இனியப் பாட்டு.
அவ்விதமாக வளர்ந்தவர் வரைந்தார்;
அடுத்த நூலோ அறமொழித் திரட்டு.
எவ்வித வாழ்விலும் இருக்கிற மாயை;
இறையால் மாற, இறுதிநூல் புரட்டு!
(இனிமைமிகு பாடல், நீதிமொழிகள், சபை உரையாளர்)
