எழுபத்து நான்கு செல்கிறது!
எழுபத்து ஐந்து வருகிறது!!
இத்தனை ஆண்டுகள் எளியன் இருப்பது,
இறையருளன்றி வேறில்லை.
நித்தமும் அவரை நினைப்பதே யன்றி,
நெஞ்சுக்கு வேறு பேறில்லை.
பத்திரமாகக் காப்பவர் உரைக்கும்,
பணியும் எனக்கு நூறில்லை.
சித்தம் ஒன்றே, செயலில் அன்பே.
செய்யிறை வற்றும் ஆறில்லை!
-கெர்சோம் செல்லையா.