- 
நல்வாழ்த்து:
- 
போற்றிடுவோம் நல்லிறையை,
 புவிதனில் நாம் இருக்கையிலே.
 நேற்றிருந்தோர் இன்றில்லை;
 நினைப்போம் நாம் நம் நிலையை!நல்வாக்கு: 
 மத்தேயு 26: 40-41.
 “அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ‘ ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ‘ என்றார்.”நல்வாழ்வு: 
 தூய ஆவியரே,
 தெய்வத் திருவுருவே,
 துவளும் உடல் பாரும்;
 துணிவை நீர் தாரும்.மாய உலகினிலே, 
 மயங்கி விழுகையிலே,
 மடையன் எனை மீட்க,
 மன்னா, நீர் வாரும்!
 ஆமென். 
