அந்த இருளில் வந்த கயவன்,

ஆண்டவர் தேர்ந்த அடியன்.

மைந்தனேசை முத்தம் இட்டு,

மாட்டி விடுகிற தடியன். 

இந்த மாதிரி அன்று ஒருவன்;

இன்றோ பலபேர் உள்ளர்.

எந்த அவையிலும் நேர்மை இல்லை;

யாவரும் இங்கு  கள்ளர்!

(மத்தேயு 26:45-50)