பசுமை இலைகள் மேல் வரு முன்பு,
பழங்கள் கொடுப்பது அத்தி மரம்.
புசிக்க ஒன்று கிடைக்குமோ என்று,
போனார் ஆண்டவர் பசி நேரம்.
அசையும் இலைகள் அடியில் சென்று,
ஆண்டவர் கேட்டார் கனி எங்கே?
இசைபட வாழக் கொடுத்தல் நன்று.
ஏய்த்தவர் பட்டார், பார் அங்கே!
(மாற்கு 11:11-26)