எந்தப் பணியும் தொடர விரும்பின்,
இருக்க வேண்டும் அடியார்கள்.
அந்தப்படியே ஊழியம் புரிந்தால்,
ஆற்றல் பெருக, மடியார்கள்.
தந்தைப் பணிக்கு இயேசு தெரிந்த,
தன்னலம் அற்ற அடியார்கள்,
சொந்தத் தொழிலைக் கை விட்டாலும்,
துயர் அழைப்பில் மடியார்கள்!
(மத்தேயு 10)