ஏழை எளியோர் இறைவனுக்குரியோர்; இவர்களின் தாழ்மை கற்றவராய், கோழை என்று புறந் துரத்தாமல், கொடுத்து உதவி செய்திடுவீர். நாளை எண்ணிக் கவலை உறாதீர்; நடத்தும் இறையருள் பெற்றவராய், வேளை தோறும் வேண்டுதலினால், விண்ணின் அரசுள் உய்திடுவீர்! (மத்தேயு: 5-7)