தந்தை தாயும், விந்தை இயேசுவும்!

தந்தை தாயும், விந்தை இயேசுவும்!

கற்றவர் வரிசையில் நான் நிற்க,
கல்வி தந்தவர் தந்தையே.
பெற்றிட இயலா மீட்படைய,
பேறு பார்த்தவர் அன்னையே.
சுற்றமும், உறவும், சூழ்நிலையும்,
சூழ்ச்சிகள் செய்து எதிர்த்தாலும்,
மற்றவர் முன்பு தலை நிமிர்த்தும்,
மறையோன் இயேசு விந்தையே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 2 people, including Krish Kumar
 

அலகை அறிந்தது!

அலகை அறியும், அடுத்தவரோ அறியவில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:41.
41 பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.

கிறித்துவில் வாழ்வு:
யாருக்கு நன்மை செய்தோமோ,
அவரும் நம்மைப் புரிவதில்லை!
போருக்கு வந்திடும் எதிரியுமோ,
புரிந்தும், நன்மையைத் தெரிவதில்லை!
பாருக்கு மீட்பைப் பகிர்ந்தளிக்கும்,
படைத்தோன் மகனுக்கே இந்த நிலை!
நீருக்குக் குமிழியாயிருக்கும்,
நிலையிலா எனக்கேன் வீண் கவலை?
ஆமென்.

Image may contain: 1 person
LikeShow More Reactions

Comment

நலமாக்கும் நல்லவர்!

நலமாக்கும் நல்லவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:40.
40 சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

கிறித்துவில் வாழ்வு:
இரவானாலும் பகலானாலும்,
இயேசுவின் அண்டை வாருங்கள்.
மரமாய் வளர்ந்தும், கனிகளிலாத,
மலட்டை நினைவு கூருங்கள்.
கரத்தால் தொட்டு, பிணிகள் நீக்கும்,
கடவுளின் மகனைச் சேருங்கள்!
வரமாய்த் தந்த ஆவியின் அருளால்,
வழங்கும் நன்மையும் பாருங்கள்.
ஆமென்.

Image may contain: 1 person, sitting and close-up
LikeShow More Reactions

Comment

Comments

எழுப்பும் ஏழைப் பிணியரை!

எழுப்பும் ஏழைப் பிணியரை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:38-39.
38 பின்பு அவர் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜுரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.
39 அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.

கிறித்துவில் வாழ்வு:
எழும்ப இயலா ஏழைப் பிணியர்
எங்களில் உண்டு, இயேசையா.
தழும்பு கொண்ட கையால் தூக்கித்
தாங்கி நிறுத்தும், நேசையா.
விழுந்து போனவர் என்றிருந்தாலும்
வேண்டுகிறாரே, இயேசையா.
தொழுது மீண்டும் திருப்பணி செய்யத்
தூயோராக்கும், நேசையா!
ஆமென்.

Image may contain: 2 people, including Daniel Joseph, people sitting

எப்படி புகழ் வரும்?

எப்படி புகழ் வரும்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா :4:36-37.
36 எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
37 அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
பெயரும் புகழும் யாரால் கிடைக்கும்?
பெரியவர் பலருக்குத் தெரியவில்லை!
உயரும் மதிப்பை எதுதான் உடைக்கும்?
உண்மையற்றோர் இதைப் புரியவில்லை!
துயரும் மகிழ்வும் கலந்த வாழ்வில்,
தொண்டால்தானே புகழ் கிடைக்கும்.
வயிறும் வாயும் வாழ்க்கை என்றால்,
வந்த புகழைப் பழி உடைக்கும்!
ஆமென்.

Image may contain: one or more people and child
LikeShow More Reactions

Comment

அலகை பிடித்தவரும், உலகைப் பிடிப்பவரும்!

அலகை பிடித்தவரும், உலகைப் பிடிப்பவரும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:33:35.
33 ஜெபஆலயத்திலே அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
34 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான்.
35 அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.

கிறித்துவில் வாழ்வு:
அலகை பிடிக்க, ஆடுவாருண்டு.
ஆண்டவர் அதட்ட, விடுவாருண்டு.
உலகைப் பிடிக்க, ஒடுவாருண்டு.
உணர்ந்து, இறையைத் தொடுவாருண்டு.
நிலைமை இதுவே, காண்பீர் என்று,
நெஞ்சம் தாழ்த்திக் கேட்பேன் இன்று.
புலவன் பேச்சு பொய்மை அன்று;
புனிதர் ஏசுவின் வழியே நன்று!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment