வந்த வீரரைத் தடுக்க எண்ணி,
வாளை எடுத்தான் ஒருவன்.
அந்த தவற்றையும் முடிவு பண்ணி,
அதிசயமாக்கினார் இறைவன்.
எந்த வாளால் எவர் வாழ்ந்தாலும்,
அவரையும் அவ்வாள் வீழ்த்தும்.
இந்த அறத்தால் நிலை தாழ்ந்தாலும்,
இறையே நம்மை வாழ்த்தும்!
(மத்தேயு 26:51-56; லூக்கா 22:49-53 & யோவான் 18:1-11).