எருசலேம் நகரில் இயேசு வருகையில்,
எளியர் ஏழையர் வரவேற்றார்.
பெருந்திரள் சிறுவர் பெரியோர் அவரில்,
புகழும் வாழ்த்தொலி இறை கேட்டார்.
அருவருப்பென்கிற கழுதை மேலமர்ந்து,
அமைதியினாண்டவர் வலம் வந்தார்.
இறையரசமைக்கச் சண்டையிடாதீர்;
இயேசு தாழ்மையில் நலம் தந்தார்!
(லூக்கா 19:28-38)