திரும்பி வருவான் தன் மகனென்று,
தேடும் தந்தை காத்திருந்தார்.
இருந்த வீட்டில் நிலை கொள்ளாது,
ஏங்கி எங்கும் பார்த்திருந்தார்.
வருந்தி வருகிற மகனை அணைக்க,
வயது முதிர்விலும் ஓடுகிறார்.
தெரிந்து கொள்வீர் இறையின் அன்பை;
தெய்வம் நம்மைத் தேடுகிறார்!
(லூக்கா 15:11-32).