ஆண்டவர் செய்த அருஞ்செயல் யாவும் அவருக்கில்லை, பிறருக்கே. மாண்டவர் கூட அவர் குரல் கேட்டு, மறுபடி வாழ்ந்தது உறவுக்கே. தோண்டிப் பார்க்கும் நம் நிலை இன்று, தூய நினைப்பில் யாருக்கே? வேண்டிடும் நன்மை பகிருவதாலே, விளையும் நூறாய் ஊருக்கே! (யோவான் 11).