யாரோ செய்கிற தவற்றால் இன்று, எத்தனைபேர் உயிர் துறக்கிறார். போரோ, கொலையோ அமைதி தராது, புரிந்தவர் இவற்றை வெறுக்கிறார். ஏரோ தரசன் படை விடு முன்பு, இறைமகன் எகிப்து செல்கிறார். நாராய்க் கிழியும் நிலையிலும் கூட, நம்பி நடப்பவர் வெல்கிறார்! (மத்தேயு 2)