பல் சொல்லும் பாடம்!

என் பல்லெல்லாம் ஆடுவதேன்?

இதனால் அழுக்கு கூடுவதேன்?

முன் நிற்போர்க்கு நாறுவதேன்?

முகரா நான் எதிர் கூறுவதேன்?

தன் நிலை அறியா மனிதர் நாம்;

தவறிலை என்கிற புனிதர் நாம்.

இந்நிலை அகலப் பணிதல் தாம்,  

இறைவனிடத்து இணைவதாம்!

-கெர்சோம் செல்லையா.