நம்பிக்கையோடு நிற்றல்!
இறை மொழி: யோவான் 20:11-13.
11. மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,
12. இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.
13. அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.
இறை வழி:
நம்பும் மனிதர் நிலைத்து நின்றால்,
நன்றாய்க் காண்பர் அதிசயம்.
சும்மாச் சொல்லி செல்வது என்றால்,
சொல்லால் வருமோ அதிசயம்?
செம்மொழித் தமிழில் எழுதித் தந்தால்,
சேர்ப்பீரா இறை அதிசயம்?
இம்மாப் பற்று பெருகி வந்தால்,
யாவரும் காண்போம் அதிசயம்.
ஆமென்.
