பன்னிரு ஆண்களை இசரயெல் பெற்றார், பாசம் மட்டும் இருவரில் உற்றார். சொன்ன கனவால் ஒருவனை இழந்தார். சொல் நிறைவேற யோசப் உழன்றார். அன்னிய நாட்டில் அடிமை என்றானார். ஆயினும் இறையோ உடனுண்டானார். இன்னலின் போது பலபேர் கேட்பார்; இறையோ இரங்கி நம்மை மீட்பார்!