தீயோன் அறிவான்,

நற்செய்தி மாலை: மாற்கு: 1:23-24.
“அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, ‘ நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ‘ என்று கத்தியது”.
நற்செய்தி மலர்:
தீயோன் அறிவான், திருடனும் அறிவான்,
தெய்வ மைந்தன் இயேசென்று.
நீ யார் என்று நம்மவர் கேட்கும்,
நிலையை இங்கு பாரின்று!
பேயோன் பிடியில் இருப்பவர் மீள,
பிழை உணர்வாய், இது நன்று.
சேயாய் நாமும் வாழ்ந்தால்தானே,
சிறக்கும் தெய்வப் பணி வென்று!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு: 1:23-24.

"அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது".

நற்செய்தி மலர்:

தீயோன் அறிவான், திருடனும் அறிவான்,

தெய்வ மைந்தன் இயேசென்று.

நீ யார் என்று நம்மவர் கேட்கும்,

நிலையை இங்கு பாரின்று!

பேயோன் பிடியில் இருப்பவர் மீள,

பிழை உணர்வாய், இது நன்று.

சேயாய் நாமும் வாழ்ந்தால்தானே,

சிறக்கும் தெய்வப் பணி வென்று!

ஆமென்.
Like ·  · Share

தூக்கிட வலுவாம் வாக்கினையே,

நற்செய்தி மாலை: மாற்கு 1:21-22.

“அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.”
நற்செய்தி மலர்:
வாக்கிலும் சொல்லிலும் வல்லவரே,
வாழ்விலும் நீர்தான் நல்லவரே.
ஆக்கிடும் செயல்கள் யாவிலுமே,
ஆளுமை உமதே, ஆண்டவரே.
போக்கிட மில்லா எழையரே,
பொய்மையில் கிடப்பது புரியலையே.
தூக்கிட வலுவாம் வாக்கினையே,
தூயா, எமக்கும் ஈந்திடுமே!
ஆமென்.
நற்செய்தி மாலை: மாற்கு 1:21-22.
"அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்."
நற்செய்தி மலர்:
வாக்கிலும் சொல்லிலும் வல்லவரே,
வாழ்விலும் நீர்தான் நல்லவரே.
ஆக்கிடும் செயல்கள் யாவிலுமே,
ஆளுமை உமதே, ஆண்டவரே.
போக்கிட மில்லா எழையரே,
பொய்மையில் கிடப்பது புரியலையே.
தூக்கிட வலுவாம் வாக்கினையே,
தூயா, எமக்கும் ஈந்திடுமே!
ஆமென்.
Like ·  · Share

எதை விட்டோம், இயேசுவிற்காக?

எதை விட்டோம், இயேசுவிற்காக?
நற்செய்தி மாலை: மாற்கு: 1:19-20.
“பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.”

நற்செய்தி மலர்:
தந்தையை விட்டார், தம் பணி விட்டார்;
தகப்பன் வீட்டுச் செல்வமும் விட்டார்.
மைந்தனாய் இறைவன் வந்து அழைத்தார்;
மண்ணின் பெருமை யாவும் விட்டார்.
அந்த நாள் மீனவர் அப்படியிருந்தார்.
அதனால் அவரும் அடியார் ஆனார்.
இந்த நாள் இதனை எடுத்துரைப்பார்,
எதனை விட்டார்? இறைவன் அறிவார்!
ஆமென்.

எதை விட்டோம், இயேசுவிற்காக?

நற்செய்தி மாலை: மாற்கு: 1:19-20.

"பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்."

நற்செய்தி மலர்:

தந்தையை விட்டார், தம் பணி விட்டார்;

தகப்பன் வீட்டுச் செல்வமும் விட்டார்.

மைந்தனாய் இறைவன் வந்து அழைத்தார்;

மண்ணின் பெருமை யாவும் விட்டார்.

அந்த நாள் மீனவர் அப்படியிருந்தார்.

அதனால் அவரும் அடியார் ஆனார்.

இந்த நாள் இதனை எடுத்துரைப்பார்,

எதனை விட்டார்? இறைவன் அறிவார்!

ஆமென்.
Like ·  · Share
• நற்செய்தி மாலை

Write a comment…

மாய்மை வலையில் விழுந்தவரை…..

நற்செய்தி மாலை: மாற்கு 1:16-18.

முதல் சீடர்களை அழைத்தல்:
“அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ‘ என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ‘ என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.”

நற்செய்தி மலர்:
தூய்மை அற்றோர் எனக் கருதித்
தூரம் விலகிய மீனவரை
வாய்மை வேந்தன் விளிக்கின்றார்;
வாழ்வுப் பணியை அளிக்கின்றார்.
தாய்மை அன்பினும் மேலான,
தன்மை நிறைந்த இறைப்பணியால்,
மகிழ்ந்து பிடிக்க அழைக்கின்றார்!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:16-18.
முதல் சீடர்களை அழைத்தல்:
"அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்."

நற்செய்தி மலர்:
தூய்மை அற்றோர் எனக் கருதித்
தூரம் விலகிய மீனவரை
வாய்மை வேந்தன் விளிக்கின்றார்;
வாழ்வுப் பணியை அளிக்கின்றார்.
தாய்மை அன்பினும் மேலான,
தன்மை நிறைந்த இறைப்பணியால்,
மாய்மை வலையில் விழுந்தவரை,
மகிழ்ந்து பிடிக்க அழைக்கின்றார்!
ஆமென்.
LikeLike ·  · Share

திருந்தத் தேவை இல்லை

மாலை:மாற்கு 1:14-15.
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்:
“யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ‘ காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ‘ என்று அவர் கூறினார்.”

மலர்:
திருந்தத் தேவை இல்லை என்று,
துணிவாய்ச் சொல்வோர் யாரிங்கே?
தூய்மை தவிர, மற்றது செய்யா
தெய்வம் மட்டும் தானிங்கே!
வருந்தத் தேவை இல்லை என்று,
வழி திரும்பார் நிலை எங்கே?
வாழ்வின் முடிவு கண்ணீராகி
வதங்கும் காட்சி பாரிங்கே!
ஆமென்.

மாலை:மாற்கு 1:14-15.
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்:
"யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்."

மலர்:
திருந்தத் தேவை இல்லை என்று,
துணிவாய்ச் சொல்வோர் யாரிங்கே?
தூய்மை தவிர, மற்றது செய்யா
தெய்வம் மட்டும் தானிங்கே!
வருந்தத் தேவை இல்லை என்று,
வழி திரும்பார் நிலை எங்கே?
வாழ்வின் முடிவு கண்ணீராகி
வதங்கும் காட்சி பாரிங்கே!
ஆமென்.
LikeLike ·  · Share

சோதனைப் பாடும் வருவதுண்டு.

நற்செய்தி மாலை: மாற்கு 1:12-13.
இயேசு சோதிக்கப்படுதல்:
“உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.”
நற்செய்தி மலர்:
எவ்வழி நடத்தல் ஏற்றதென்று
எண்ணும் பண்பு நம்மிலுண்டு.
செவ்வழி நடக்க முடிவெடுப்பின்,
சோதனைப் பாடும் வருவதுண்டு.
இவ்வழி வந்து நமை மீட்கும்
இறைமகன் துணையும் இன்றுண்டு.
கவ்விடும் சூது ஒழிந்துவிடும்;
கடவுளின் வாக்கை நம்பிவிடு!
ஆமென்.

இறைவன் மகிழ்ந்தார்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:11.
“அப்பொழுது, ‘ என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ‘ என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.”

நற்செய்தி மலர்:
எதை முடிக்க இறைமகன் வந்தார்?
எண்ணிப் பார்த்து ஏற்றிடுவோம்?
அதைக் கண்டு இறைவன் மகிழ்ந்தார்.
அவருள் இணைந்து போற்றிடுவோம்.

இதைக் கேட்கும் நம்பணி என்ன?
இந்த வாழ்வின் பொருளறிவோம்.
உதை பந்தாய்த் துள்ளுதல் அல்ல;
உண்மை மகனாய் அருள்பெறுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:11.

"அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது."

நற்செய்தி மலர்:

எதை முடிக்க இறைமகன் வந்தார்?

எண்ணிப் பார்த்து ஏற்றிடுவோம்?

அதைக் கண்டு இறைவன் மகிழ்ந்தார்.

அவருள் இணைந்து போற்றிடுவோம்.

இதைக் கேட்கும் நம்பணி என்ன?

இந்த வாழ்வின் பொருளறிவோம்.

உதை பந்தாய்த் துள்ளுதல் அல்ல;

உண்மை ஒளிர அருள்பெறுவோம்!

ஆமென்.
LikeLike ·  · Share

புறாவைப்போல்

நற்செய்தி மாலை: மாற்கு 1:10.
“அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.”

நற்செய்தி மலர்:
சுறாக்கள் சுழலும் நீர்நிலையில்,
சொரியும் கண்ணீர் பெருகுகையில்,
சோர்ந்து அடியேன் விழுகின்றேன்;
சொல்லத் தவித்து அழுகின்றேன்.
புறாக்கள் காட்டும் அமைதியினில்,
பொய்மை அழுக்கு அகற்றுகையில்,
பொறுமை கொண்டு தொழுகின்றேன்;
புனிதா, உம்மால் எழுகின்றேன்!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:10.
"அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்."

நற்செய்தி மலர்:
சுறாக்கள் சுழலும் நீர்நிலையில்,
சொரியும் கண்ணீர் பெருகுகையில்,
சோர்ந்து அடியேன் விழுகின்றேன்;
சொல்லத் தவித்து அழுகின்றேன்.
புறாக்கள் காட்டும் அமைதியினில்,
பொய்மை அழுக்கு அகற்றுகையில்,
பொறுமை கொண்டு தொழுகின்றேன்;
புனிதா, உம்மால் எழுகின்றேன்!
ஆமென்.
LikeLike ·  · Share

இவர்களின் மீட்பை நினைப்பது யார்?

இவர்களின் மீட்பை நினைப்பது யார்?
இவர்களுக்குதவி செய்பவர் யார்?
அவரவர் வழியைப் புகழ்கின்றீர்;
அத்துடன் இவரையும் எண்ணிடுவீர்!
-கெர்சோம் செல்லையா.

இவர்களின் மீட்பை நினைப்பது யார்?
இவர்களுக்குதவி செய்பவர் யார்?
அவரவர் வழியைப் புகழ்கின்றீர்;
அத்துடன் இவரையும் எண்ணிடுவீர்!
-கெர்சோம் செல்லையா.
LikeLike ·  · Share

யோவானைப் பார்!

யோவானைப் பார்!

நற்செய்தி மாலை: மாற்கு:1:7-8.
“அவர் தொடர்ந்து, ‘ என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ‘ எனப் பறைசாற்றினார்.”

நற்செய்தி மலர்:
தனது நீராட்டின் தரமறிந்தார்;
தாழ்மையை யோவான் தரித்திட்டார்.
இனங்களை மீட்கும் பணிசெய்வார்,
எங்கும் தாழ்மை கொண்டிருப்பார்.

எனது செயலே எனப்புகழ்வார்,
இவரைப் பார்த்தால் தாழ்ந்திடுவார்.
கனவு போன்ற உலகினிலே,
கறையை நீக்கி வாழ்ந்திடப் பார்!
ஆமென்.

யோவானைப் பார்!
நற்செய்தி மாலை: மாற்கு:1:7-8.
"அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்."

நற்செய்தி மலர்:
தனது நீராட்டின் தரமறிந்தார்;
தாழ்மையை யோவான் தரித்திட்டார்.
இனங்களை மீட்கும் பணிசெய்வார்,
எங்கும் தாழ்மை கொண்டிருப்பார்.

எனது செயலே எனப்புகழ்வார்,
இவரைப் பார்த்தால் தாழ்ந்திடுவார்.
கனவு போன்ற உலகினிலே,
கறையை நீக்கி வாழ்ந்திடப் பார்!
ஆமென்.
LikeLike ·  · Share
• நற்செய்தி மாலை

Write a comment…