கிறித்து பிறக்க விடுவீரா?

கிறித்து பிறக்க விடுவீரா?

“நெஞ்சில் கிறித்து கருவுற்றால்,
நேர்மை செயலில் பிறந்திருக்கும்.
வஞ்சம் நிறைந்த உலகோர் முன்
வாய்மை அன்பால் சிறந்திருக்கும்.
கொஞ்சமும் இதனை எண்ணாது,
கொண்டாடும் நாம் கிறித்தவரா?
கெஞ்சிக் கேட்பேன் இன்னாளில்;
கிறித்து பிறக்க விடுவீரா?”
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

தொழு நோயாளரையும் தொட்டுச் சேர்க்கும் அன்பு!

தொழு நோயாளரையும் தொட்டுச் சேர்க்கும் அன்பு!
நற்செய்தி மாலை: மாற்கு 1:40-41.
“ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ‘ நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ‘ என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ‘ நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! ‘ என்றார்.”
நற்செய்தி மாலை:
தொற்றும் நோயில் கொடிய,
தொழுநோய் கொண்டு மடிய,
சற்றும் விரும்பா ஒருவர்,
சட்டம் மீறி வந்தார்.
முற்றும் வெறுக்கும் நிலையே;
மும்மை இறையில் இலையே.
பற்றின் உறுதி கண்டார்;
பரிவில் சேர்த்துக் கொண்டார்!
ஆமென்.

எங்கும் சொல்வோமா?

எங்கும் சொல்வோமா?
நற்செய்தி மாலை: மாற்கு 1:38-39.
“அதற்கு அவர், ‘ நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன் ‘ என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.”

நற்செய்தி மலர்:
எங்கே, எப்படி, யாருக்கு,
எடுத்துச் சொல்ல அழைப்பீரோ,
அங்கே, அவரது மீட்பிற்கு,
அருளைத் தராது இருப்பீரோ?
இங்கே காணும் இருளிற்கு,
என்னை விளக்காய் மாற்றீரோ?
மங்கா ஒளியைக் கொடுப்பதற்கு,
மெழுகாய் உருக்க மாட்டீரோ?
ஆமென்.

கொல்லச் சொல்பவன் கடவுளா?

கொல்லச் சொன்னாரா இறைவன்?

கொல்லச் சொல்பவன் கடவுளல்ல;
கொலைகாரன் என அறிவோமே.
நல்லதைச் செய்பவர்தான் கடவுள்;
நன்மை செய்து வாழ்வோமே!

கல்லா மனிதர் இதை உணர,
கடவுளின் செய்தி கொடுப்போமே.
எல்லாத் தீமையும் தீர்ப்பில் வரும்;
இறைவனின் அன்பில் மகிழ்வோமே!
– கெர்சோம் செல்லையா.

நற்செய்தி மாலை's photo.
நற்செய்தி மாலை's photo.
Like ·  · Share

யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?

யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?

நற்செய்தி மாலை 1: 36-37.

“சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ‘ எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ‘ என்றார்கள்.”
நற்செய்தி மலர்:
தேடும் இறையைத் தேடிச் சென்று,
தேவை கேட்டல் நம் பண்பு.
ஆடும் ஆட்டம் அறமா என்று,
அறிந் துணர்தல் நற்பண்பு!
வாடும் ஏழை வறுமை கண்டு,
வழங்கும் அன்பே இறைத்தொண்டு.
கூடும் கூட்டம் புரிந்துகொண்டு,
குறை திருத்தின் வாழ்வுண்டு!
ஆமென்.
யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?
நற்செய்தி மாலை 1: 36-37.
"சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ' எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ' என்றார்கள்."
நற்செய்தி மலர்:
தேடும் இறையைத் தேடிச் சென்று,
தேவை கேட்டல் நம் பண்பு.
ஆடும் ஆட்டம் அறமா என்று,
அறிந் துணர்தல் நற்பண்பு!
வாடும் ஏழை வறுமை கண்டு,
வழங்கும் அன்பே இறைத்தொண்டு.
கூடும் கூட்டம் புரிந்துகொண்டு,
குறை திருத்தின் வாழ்வுண்டு!
ஆமென்.
Like ·  · Share

கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்…

கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்…
நற்செய்தி மாலை: மாற்கு 1: 35.
“இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.”
நற்செய்தி மலர்:
கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்
கண்கள் வேண்டும், கேட்டிடுவோம்.
இருக்கும் துன்பம் எங்கோ பறக்கும்,
இறையுள் இணையும், ஓட்டிடுவோம்.
பெருக்கும் செல்வம் பகிர்ந்து கொடுக்கும்,
பேரூற்றினை நாம் தோண்டிடுவோம்!
தெருக்கல் போன்று போகாதுரைக்கும்
திறமை ஒழியும், தாண்டிடுவோம்.
ஆமென்.
கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்...

நற்செய்தி மாலை: மாற்கு 1: 35.

"இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்."

நற்செய்தி மலர்:

கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்

கண்கள் வேண்டும், கேட்டிடுவோம்.

இருக்கும் துன்பம் எங்கோ பறக்கும்,

இறையுள் இணைந்து ஓட்டிடுவோம்.

பெருக்கும் செல்வம் பகிர்ந்து கொடுக்கும்,

பேரூற்றினை நாம் தோண்டிடுவோம்!

தெருக்கல் போன்று போகாதுரைக்கும்

திறமை ஒழிய வேண்டிடுவோம்.

ஆமென்.
Like ·  · Share

நலம் தரும் இயேசு!

நலம் தரும் இயேசு!

நற்செய்தி மாலை:  மாற்கு 1: 32-34.

“மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.”
நற்செய்தி மலர்:
பிறக்கும் முன்னே சொல் அறிவார்,
பிணியைச் சொல்லால் போக்குகிறார்.
இறக்கும் நிலையில் இருந்தாலும்,
இயேசு நலமாய் ஆக்குகிறார்.
மறக்கும் மனிதர் வைகின்றார்;
மன்னித்திவரோ செய்கின்றார்.
சிறக்கும் வாழ்வு தருவதற்கு,
சீக்கை நீக்கி வைக்கின்றார்!
ஆமென்.

நலம் தரும் இயேசு!
நற்செய்தி மாலை:  மாற்கு 1: 32-34.
"மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை."
நற்செய்தி மலர்:
பிறக்கும் முன்னே சொல் அறிவார்,
பிணியைச் சொல்லால் போக்குகிறார்.
இறக்கும் நிலையில் இருந்தாலும்,
இயேசு நலமாய் ஆக்குகிறார்.
மறக்கும் மனிதர் வைகின்றார்;
மன்னித்திவரோ செய்கின்றார்.
சிறக்கும் வாழ்வு தருவதற்கு,
சீக்கை நீக்கி வைக்கின்றார்!
ஆமென்.
Like ·  · Share

சேயினைப் போன்று பற்றிடுவோம்!

நற்செய்தி மாலை: மாற்கு 1:29-31.
சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைதலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்:
“பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.”
நற்செய்தி மலர்:
ஆயிரம் கோடிகள் சேர்த்தாலும்,
அத்துடன் பொன் பொருள் கோர்த்தாலும்,
நோயினில் ஒருவர் விழுந்துவிட்டால்,
நொந்தே போகிறார், பாருங்களே!
தீயினில் விழுந்து துடிப்பதுபோல்,
தேம்பி அழுதலை விட்டுவிட்டு,
சேயினின் கைகள் தேடுதல்போல்,
தெய்வம் பற்றிட வாருங்களே!
ஆமென்.
நற்செய்தி மாலை: மாற்கு 1:29-31.
சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைதலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்:
"பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்."
நற்செய்தி மலர்:
ஆயிரம் கோடிகள் சேர்த்தாலும்,
அத்துடன் பொன் பொருள் கோர்த்தாலும்,
நோயினில் ஒருவர் விழுந்துவிட்டால்,
நொந்தே போகிறார், பாருங்களே!
தீயினில் விழுந்து துடிப்பதுபோல்,
தேம்பி அழுதலை விட்டுவிட்டு,
சேயினின் கைகள் தேடுதல்போல்,
தெய்வம் பற்றிட வாருங்களே!
ஆமென்.

இப்படி எவரும் பேசவில்லை!

நற்செய்தி மாலை: மாற்கு 1: 27-28.
“அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ‘ இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ‘ என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.”
நற்செய்தி மலர்:
இப்படி எவரும் பேசவில்லை;
இவர் பேச்சிற்கோ எதிர்ப்புமில்லை.
அப்படிப் பேசி வாழ்ந்ததினால்,
அவரது புகழிற்கு எல்லையில்லை.
எப்படியென்று கேட்கும் நாம்,
இயேசு போல வாழவில்லை.
தப்பிதம் நீங்க நமைக் கொடுத்தால்,
தருவார் நமக்கும் இந்த நிலை!
ஆமென்.
நற்செய்தி மாலை: மாற்கு 1: 27-28.
"அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது."
நற்செய்தி மலர்:
இப்படி எவரும் பேசவில்லை;
இவர் பேச்சிற்கோ எதிர்ப்புமில்லை.
அப்படிப் பேசி வாழ்ந்ததினால்,
அவரது புகழிற்கு எல்லையில்லை.
எப்படியென்று கேட்கும் நாம்,
இயேசு போல வாழவில்லை.
தப்பிதம் நீங்க நமைக் கொடுத்தால்,
தருவார் நமக்கும் இந்த நிலை!
ஆமென்.
Like ·  · Share
• நற்செய்தி மாலை

தீயோன் ஓடுதல் பார்!

தீயோன் ஓடுதல் பார்!

நற்செய்தி மாலை: மாற்கு 1: 25 – 26.
” வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ‘ என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.”
நற்செய்தி மலர்:
ஒன்றைத் தெளிவாய்த் தெரிந்திடுவோம்;
உண்மை இதுவே புரிந்திடுவோம்.

என்றும் தீயோன் நமை வெல்லான்;
இயேசு முன்னர் அவன் நில்லான்.

இன்று நம்மை ஆட்டுவிக்கும்,
இழிந்த பேயும் மாட்டிவிடும்.

தொன்று தொட்டு இது உண்மை;
தொடர்ந்து செய்வோம் நாம் நன்மை!
ஆமென்.
தீயோன் ஓடுதல் பார்!

நற்செய்தி மாலை: மாற்கு 1: 25 - 26.

'' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று."

நற்செய்தி மலர்:

ஒன்றைத் தெளிவாய்த் தெரிந்திடுவோம்;

உண்மை இதுவே புரிந்திடுவோம்.

என்றும் தீயோன் நமை வெல்லான்;

இயேசு முன்னர் அவன் நில்லான்.

இன்று நம்மை ஆட்டுவிக்கும்,

இழிந்த பேயும் மாட்டிவிடும்.

தொன்று தொட்டு இது உண்மை;

தொடர்ந்து செய்வோம் நாம் நன்மை!

ஆமென்.
Like ·  · Share