ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நூலை,

உணர்ந்தவர் தந்தார் உள்ளில் கேட்டு.

செவ்விளக்குருதி துடித்தெழும் நாளில்,

சிந்தையில் வடித்தார் இனியப் பாட்டு.

அவ்விதமாக வளர்ந்தவர் வரைந்தார்;

அடுத்த நூலோ அறமொழித் திரட்டு.

எவ்வித வாழ்விலும் இருக்கிற மாயை;

இறையால் மாற, இறுதிநூல் புரட்டு!

(இனிமைமிகு பாடல், நீதிமொழிகள், சபை உரையாளர்)

May be an image of 1 person and text

எது எது வேண்டும் என்றிறை கேட்டால்,

எதை நாம் இன்று கேட்கிறோம்?

புது விதமான ஆவல்கள் தொட்டால்,

புழுதிக் காற்றில் முடிக்கிறோம்.

பொது அறிவென்று சாலமொன் கேட்டு,

புது நூல் யாத்ததும் காண்கிறோம்.

இது போல் இன்று இறையடி தொட்டு,

ஏங்கின் அறிவு பூணுவோம்!

(1 அரசர்கள் 3:5-15)

May be an image of 1 person and text